Showing posts with label TRB. Show all posts
Showing posts with label TRB. Show all posts

Wednesday, July 25, 2018

School Working Days Calendar 2018 - 19 | Single Page

2018 - 2019 ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலைநாட்கள் விவரம்

HOW TO e-FILE INCOME TAX - STEP BY STEP VIDEO




HOW TO e-FILE INCOME TAX - STEP BY STEP VIDEO

*🌟Assessment year 2018-2019 ஆண்டிற்கு உண்டான வருமானவரி கணக்கிற்கு 2018 July 31ம் தேதிக்குள் E-Filing செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் வருமானவரி துறையால் அபாராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..*

*🌟நமது வருமானவரி கணக்கிற்கான E-Filing செய்வதற்கு ஆடிட்டரிடம் செல்லவேண்டியதில்லை நாமே செய்துகொள்ளலாம்.*

*🌟E-Filing செய்வது எப்படி என்ற வழிமுறை வீடியோவும், pdf fill ம் கீழே link ல் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு கலைக்கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி!


அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் காலிப்பணியிடம் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. புதிய பாடத்திட்டங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கலை அறிவியில் கல்வி பயில மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த கல்வியாண்டில் பொறியியல் கல்வியை விட அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதிலேயே மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது
இதனால் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கூடுதலாக 20 சதவீத இடம் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு அதில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்காண்டு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அதற்கேற்ப புதிய உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வந்தாலும் முழுமை பெறுவதில்லை. மாநிலத்தில் சுமார் 600 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப கவுரவ விரிவுரையாளர்களும் இல்லை. இதனிடையே கடந்த 2016-17ம் ஆண்டில் ஆயிரத்து 863 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த இடங்களும் நிரப்பப்படவில்லை. இவ்வாறாக சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு தேவைப்படுகின்றனர். இடையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 500 பேர் மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டனர். இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வும் அறிவிக்கப்படவில்லை.

சில அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் கெஸ்ட் லெக்சரர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் தற்காலிக ஆசிரியர்களை வைத்து சமாளிக்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவித்தபடி காலதாமதமின்றி ஆசிரியர்களை உடனே நியமிக்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Friday, April 27, 2018

5000 ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப வழக்கு - பள்ளி கல்வி முதன்மை செயலர் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 918  தலைமையாசிரியர், 4092 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிய வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆகியோருக்கு  நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது




Monday, April 23, 2018

காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம்: துறை தலைவர்களே முடிவு செய்யலாம்

தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பணி ஓய்வு, விபத்தில் மரணம், விருப்ப ஓய்வு காரணமாக அரசு துறைகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன.

இந்த இடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளின் தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்பிவைப்பர்.அங்கு நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, பணியாளர் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவோ, மின்சாரவாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு தேர்வுகள் மூலமாகவோ அக் காலியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.இவ்வாறு துறைத்தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை அனுப்பி குறிப்பிட்ட துறைகளின் ஒப்புதல் பெற்று காலியிடங்களை நிரப்புவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. துறைத்தலைவர் மூலம் அனுப்பப்படும் காலியிடங்களுக்கு அப்படியே ஒப்புதல் கிடைக்கும் என்று சொல்லவும் முடியாது. அரசின் நிதிநிலையை காரணம் காட்டிகாலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்.மாநில பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் செயலர் எஸ். ஸ்வர்ணாஅண்மையில் வெளியிட்ட அரசாணை: அரசு துறைகளில் காலியிடங்களை விரைவாக நிரப்பும் வகையில், காலியிடங்களை கணக்கிடுவதற்கு தற்போது நடைமுறையில் இருந்துவரும் முறையை மாற்றியமைக்க அரசு முடிவுசெய்துள்ளது.

துறைத்தலைவர்கள் பணிநியமன அலுவலர்களாக இருக்கும்பட்சத்தில் காலியிடங்களுக்கு நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச்சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறாமல் அவர்களே முடிவு செய்துகொள்ளலாம்.அதேபோல், துறைத்தலைவர்களுக்கு அடுத்தநிலையில் உள்ள சார்நிலை அதிகாரிகள் பணிநியமன அலுவலர்களாக இருக்கும்பட்சத்திலும் இதே நடைமுறை பொருந்தும். டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலமாகநிரப்பப்படும் பணிகளில் உள்ள காலியிடங்களையும் சம்பந்தப்பட்ட துறைத்தலைவர்களே முடிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.என்ஜிஓ சங்கம் வரவேற்பு

அரசு துறைகளில் காலியிடங்களை மதிப்பீடு செய்வது தொடர்பான புதிய நடைமுறை குறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்ஜிஓ) மாநில தலைவர் இரா.சண்முகராஜன் கூறும்போது, “புதிய முறையின்படி நேரம் பெருமளவு மிச்சமாகும். எனவே, நேரடி பணிநியமனங்கள் விரைவாக முடிக்கப்படும்.

இப்புதிய நடைமுறை வரவேற்கத்தக்கது” என்றார்.“தற்போதைய நடைமுறையில், ஆசிரியர் காலியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் ஒப்புதல் பெற்று அதை இறுதிசெய்வதற்கு அதிக காலம் ஆகிவிடுகிறது. அரசின் புதிய முறை மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பமுடியும்” என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

Saturday, April 21, 2018

Gold Coast 2018 Commonwealth Games: Final Medal Tally

கோல்ட் கோஸ்ட் 2018 காமன்வெல்த் விளையாட்டு: இறுதி பதக்கம்

1. Australia- 198 (80 Gold)
2. England- 136 (45 Gold)
3. India- 66 (26 Gold)
4. Canada- 82 (15 Gold)




Join our  Whatsapp group

Monday, April 16, 2018

தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்!!! தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.விழாவில் அமைச்சர் பேசியதாவது:-தமிழகத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகஅளவில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளனர். இந்திய அளவில் தமிழகத்தில்தான்எம்.பில் பட்டம் பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்திய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் 10-வது இடத்தில் உள்ளது. பொறியியல் கல்வியில் இந்திய அளவில் 8-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் அரசு கலைக்கல்லூரி கல்வியில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. 2018-19-ம் நிதிஆண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறைக்கு கடந்த ஆண்டை விட ரூ.940 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உதவி பேராசிரியர்கள்

தமிழகத்தில் கல்லூரிகளுக்கு 862 வகுப்பறைகள் மற்றும் 178 ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது ரூ.210 கோடி கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்போது முதல்கட்டமாக 1,863 கவுரவ பேராசிரியர்களும், இரண்டாம் கட்டமாக 1,661 கவுரவ பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உயர்கல்வித்துறையில் 2,740 உதவி பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

Friday, April 06, 2018

2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை : மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிப்பு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஇருப்பதால் வரும் கல்வியாண்டிற்குள் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் 6 ஆயிரத்து 81 உயர்நிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 803மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் துறைவாரியான ஆசிரியர்கள் இல்லாமல் தள்ளாடி வருகின்றன. அதாவது, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது.

மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாதால் ஓரிரு ஆசிரியர்களை வைத்து கொண்டு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 696 அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வரும் கல்வி ஆண்டிற்குள் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு சேர்த்து காலியாக உள்ள ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி26 மாவட்டங்களுக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், அரியலூர் 61, கோவை 3, கடலூர்82, தர்மபுரி11, ஈரோடு20, காஞ்சிபுரம்33, கரூர்3, கிருஷ்ணகிரி271, மதுரை2, நாகப்பட்டினம்145, பெரம்பலூர்19, புதுக்கோட்டை62, ராமநாதபுரம்8, சேலம்12, சிவகங்கை4, தஞ்சாவூர்33, நீலகிரி76, தூத்துக்குடி2, திருப்பூர்11, திருவள்ளூர்23, திருவண்ணாமலை381, திருவாரூர்70, திருச்சி3, வேலூர்335, விழுப்புரம்383, விருதுநகர்11 என மொத்தம் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதில் தமிழ்பாடத்திற்கு 270 பணியிடங்களும், ஆங்கிலத்திற்கு 228 பணியிடங்களும், கணிதத்திற்கு 436 பணியிடங்களும், அறிவியல் பாடத்திற்கு 696 பணியிடங்களும், சமூக அறிவியல் பாடத்திற்கு 454 பணியிடங்களும் நிரப்பபட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

 




Saturday, March 10, 2018

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடம் கணக்கெடுப்பு - பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல்



Bank Account & Smartphone -ஐ மட்டுமே வைத்து சுலபமாக பணம் சம்பாதிக்கலாம்

https://play.google.com/store/phonepe

இது 100% பாதுகாப்பானது. இது 100% எளிதானது, அது உண்மையில் மிகவும் வேகமாக இருக்கிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இடம் பெறவில்லை ஏன்?

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். கடந்த ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அத்தேர்வு மூலமாக 3,375 பேர் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் பணியமர்த்தப்பட்டனர். குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இல்லாததால் 1,060 பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இந்த காலியிடங்களையும் நடப்பு கல்வி ஆண்டுக்கான காலியிடங்களையும் சேர்த்து, புதிதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறும் என்று பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இடம் பெறவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனிடம் கேட்டபோது, அவர் கூறிய தாவது: "அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. உபரி ஆசிரியர் பணியிடங்களையும் ஆய்வுசெய்து காலியிடங்களின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும்" என்றார். இதற்கிடையே, பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,405 காலியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பாடவாரியான காலியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு: தமிழ் - 349; ஆங்கிலம் - 273; கணிதம் - 490; அறிவியல் - 773; சமூக அறிவியல் 520. இந்த காலியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பதவியில் உள்ள காலியிடங்களும் ஏற்கெனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு விரைவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


Bank Account & Smartphone -ஐ மட்டுமே வைத்து சுலபமாக பணம் சம்பாதிக்கலாம்
இது 100% பாதுகாப்பானது. இது 100% எளிதானது, அது உண்மையில் மிகவும் வேகமாக இருக்கிறது.

Sunday, March 04, 2018

TRB polytechnic lecturer books

Trb Mathematics Lecturers (Govt.Polytechnic Colleges)





TRB Lecturers physics (govt.polytechnic colleges)




Trb-Lecturers Electronics And Communication Engineering (Govt polytechnic colleges)




Lecturers Mechanical Engineering (Govt polytechnic colleges)



Friday, February 23, 2018

அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு | அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அதன்படி, பட்டதாரி ஆசிரியர் பதவியில் மட்டும் 2,223 காலியிடங்கள் உள்ளன. பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு: தமிழ்-299; ஆங்கிலம் - 237; கணிதம் - 468; அறிவியல் - 731; சமூக அறிவியல் - 488. ஆசிரியர் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில், 50 % நேரடி நியமன முறையிலும், 50 %பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது. வெயிட்டேஜ் முறையில், தகுதித்தேர்வு தேர்ச்சிக்கு 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட். மதிப்பெண்-க்கு 40 சதவீதமும் வெயிட்டேஜ் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

TRB - வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு


2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு

அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில்பாலிவால் தெரிவித்தார்.கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி: பொறியியல், பாலிடெக்னிக்கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்களை சமீபத்தில் நிரப்பியுள்ளோம். அரசு கலைக் கல்லுாரிகளைபொறுத்தவரை, பேராசிரியர்கள் சிலர், கோர்ட்டை அணுகியுள்ளதால், பணிகள் தேங்கியுள்ளன; சிக்கல் தீர்க்கப்பட்டு, முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கடந்த இரு ஆண்டுகளில், 370 பேராசிரியர்கள் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளனர்; 1,966 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவ்விரண்டையும் சேர்த்து, 2,336 இடங்களுக்கான தகவலை, டி.ஆர்.பி., வசம்ஒப்படைக்க உள்ளோம்.

இதற்கான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பல்கலை, கல்லுாரி பேராசிரியர்களின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.