தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஇருப்பதால் வரும் கல்வியாண்டிற்குள் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் 6 ஆயிரத்து 81 உயர்நிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 803மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் துறைவாரியான ஆசிரியர்கள் இல்லாமல் தள்ளாடி வருகின்றன. அதாவது, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது.
மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாதால் ஓரிரு ஆசிரியர்களை வைத்து கொண்டு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 696 அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வரும் கல்வி ஆண்டிற்குள் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு சேர்த்து காலியாக உள்ள ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி26 மாவட்டங்களுக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், அரியலூர் 61, கோவை 3, கடலூர்82, தர்மபுரி11, ஈரோடு20, காஞ்சிபுரம்33, கரூர்3, கிருஷ்ணகிரி271, மதுரை2, நாகப்பட்டினம்145, பெரம்பலூர்19, புதுக்கோட்டை62, ராமநாதபுரம்8, சேலம்12, சிவகங்கை4, தஞ்சாவூர்33, நீலகிரி76, தூத்துக்குடி2, திருப்பூர்11, திருவள்ளூர்23, திருவண்ணாமலை381, திருவாரூர்70, திருச்சி3, வேலூர்335, விழுப்புரம்383, விருதுநகர்11 என மொத்தம் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதில் தமிழ்பாடத்திற்கு 270 பணியிடங்களும், ஆங்கிலத்திற்கு 228 பணியிடங்களும், கணிதத்திற்கு 436 பணியிடங்களும், அறிவியல் பாடத்திற்கு 696 பணியிடங்களும், சமூக அறிவியல் பாடத்திற்கு 454 பணியிடங்களும் நிரப்பபட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
-
Pothu Arivu Ulagam – NOV 2017 https://userupload.net/w4nfnfujzifm Pothu Arivu Ulagam – OCTOBER 2017 https://userupload.net/0...
-
TRB தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.