TNPSC SYLLABUS
http://www.tnpsc.gov.in/new_syllabus.html
http://www.tnpsc.gov.in/new_syllabus.html
நன்றி - திரு. தம்பு.சி
-------------------------
குரூப்-4 தேர்வுக்கான விடைகளை சரி பார்த்தவுடன் நாம் முதலில் துயரப்படுவது தமிழ் பகுதியில் இன்னும் 5 முதல் 15 வினாக்கள் வரை சரியாக அளித்திருக்கலாமே என்று. காரணம் 2016 குரூப்-4 தேர்வுக்கான தமிழ் பகுதி 97 கேள்விகளை சரியாக செய்வதற்குரிய சாத்தியக் கூறுகளை கொண்டதால் தான். அந்த நூலிலையில் விடப்பட்ட 5 முதல் 15 கேள்விகளின் கண்ணிகளின் ஊற்றுக்கண் எங்கே என்பது குறித்து தான் இங்கே விரிவாக ஒர் கற்பனை வடிவில் அலசப்படுகிறது. - முக்கியமாக Freshers-க்கு.
-------------------------
குரூப்-4 தேர்வுக்கான விடைகளை சரி பார்த்தவுடன் நாம் முதலில் துயரப்படுவது தமிழ் பகுதியில் இன்னும் 5 முதல் 15 வினாக்கள் வரை சரியாக அளித்திருக்கலாமே என்று. காரணம் 2016 குரூப்-4 தேர்வுக்கான தமிழ் பகுதி 97 கேள்விகளை சரியாக செய்வதற்குரிய சாத்தியக் கூறுகளை கொண்டதால் தான். அந்த நூலிலையில் விடப்பட்ட 5 முதல் 15 கேள்விகளின் கண்ணிகளின் ஊற்றுக்கண் எங்கே என்பது குறித்து தான் இங்கே விரிவாக ஒர் கற்பனை வடிவில் அலசப்படுகிறது. - முக்கியமாக Freshers-க்கு.
பொதுவாக இந்த தியரி அடிப்படையில் படித்திருந்தால் ஒரு வேளை நாம் 100-100 எடுத்திருப்போமோ என்ற அடிப்படையில் இந்த நீள்கட்டுரை.
First Process: Reading >>> Retention >>> Recognition
முதலில் தமிழ் பகுதியை பொறுத்தவரை சமச்சீர் கல்வி 6-10 வகுப்பு புத்தகத்திலிருந்து வாசித்து (Light Reading) முடித்தவுடன், இதற்கு அடுத்தபடியாக ஒரு சில பயிற்சி மையங்களில் அளிக்கப்பட்ட தமிழ் பகுதி அ, ஆ, இ - சிலபஸ் வாரியான அவர்களின் குறிப்புகளை படிக்கலாம். அதாவது ஏற்கனவே வாசித்ததை இன்னொரு முறை வேறொரு கோணத்தில் ஒருங்கிணைந்து படிப்பது (Retention). சோர்வும் ஏற்படாது. மனதிலும் நிற்கும். மேலும் அதில் ஒரே பக்கத்தில் முடியரசனும் (L.H.S), சுரதாவும் (R.H.S) இருப்பார்கள். நாம் இரண்டு பேரையும் கம்பேர் செய்யலாம். இவருக்கு 'பூங்கொடி' 1966 தமிழக அரசு விருது, இவருக்கு 'தேன்மழை' தமிழ் வளர்ச்சித்துறை விருது, என்று..
இதற்கு அடுத்தபடியாக பழைய தேர்வுகளின் வினாத்தாளை பயிற்சி செய்து பார்க்கலாம். இதன் மூலம் கேள்விகள் இதற்கு முன் எப்படி எல்லாம் (Twist & Check) கேட்கப்பட்டுள்ளன என்பதும், நாம் அதற்கு சரியான விடைகளை அளிக்கிறோமோ (Recognition) என்றும் சரி பார்த்துக்கொள்ள முடியும்.
Second Process: Int. Reading = Note Making = Constructive
Next மீண்டும் சமச்சீர்கல்வி புத்தகத்தை 'ஒவ்வொரு வரியாக' ஆழ்ந்து படிக்க (Intensive Reading) வேண்டும். அப்படி படிக்கும் போது Ex: “ஜி.யு.போப் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக” என்ற வரியில்
தமிழ், தெலுங்கு- என்ற வரியை ஆரஞ்சு Highlighter Pen கொண்டும், அதற்கு அடுத்ததாக வரும்
“திருக்குறளை ஆங்கிலத்தில் 1886-ம் ஆண்டு” என்ற வரியில் 1886-ஐ கீரின் Highlighter Pen கொண்டும் ஹைலைட் செய்யலாம்
அதாவது கீரின் Highlighting ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்வி; ஆரஞ்சு Highlighting இது வரை கேட்கப்படாத கேள்வி என்ற வகையில். இதையே நாம் "இந்தியன் ஒப்பினியன்" மற்றும் "தென்னாப்பிரிக்க சத்யாகிரம்" (நூல்) இதோடு ஒப்பீட்டு பார்க்கும்போது இந்த முக்கியத்துவம் புரியும்.
இதோடு Note making என்ற வகைக்காக ஒரு நோட்டையும் உருவாக்கி கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு “ஜி.யூ போப் பிரான்சு நாட்டில் பிறந்து பின்பு சாந்தோம்-சாயர்புரம் பின்பு இங்கிலாந்து சென்று திருமணம், திரும்பி ஊட்டி வந்து பள்ளி ஆரம்பித்து, அதன் பின்பு மீண்டும் இங்கிலாந்து சென்று அவருடைய பணிகள்” என இவற்றை ஒரு சிறு குறிப்பாக எழுதலாம்.
இது நமக்கு மூன்றாவது மெட்ரியல்..
(அதாவது
01.சமச்சீர் கல்வி புக்,
02.இன்ஸ்ட்யூட் (Syllabus Based) புக்,
03.நம்ம நோட்ஸ் (இதை Short & Crispy ஆக செய்ய வேண்டும்)
(அதாவது
01.சமச்சீர் கல்வி புக்,
02.இன்ஸ்ட்யூட் (Syllabus Based) புக்,
03.நம்ம நோட்ஸ் (இதை Short & Crispy ஆக செய்ய வேண்டும்)
இதனூடே ஜி.யூபோப் அவர்களின் நிகழ்வை (பிரான்ஸ்-இந்தியா-இங்கிலாந்து) ஒரு கோட்டு வரைபடமாக வரைந்து வருஷத்தை புள்ளி கொண்டு அந்த அந்த நிகழ்வை சுருக்கமாக (அதாவது 1820-பிறப்பு; 1886-திருக்குறள்; 1900-திருவாசகம் 1908-இறப்பு) அதனுள் அடக்கினால் நாம் அந்த வரைபடத்தை பார்க்கும்போது எல்லா நிகழ்வும் என்றும் மறக்காது.
அதற்காக ஒவியராக மாறி சிரமம் எடுத்து வரைய வேண்டாம். சிறு சிறு படம். 1886ல்- திருக்குறள்ன்னா ஒரு புக் மாதிரி ஒரு படம் அவ்வளவு தான். இது constructive learning ஆகும். மேற்க்கண்ட இவை அனைத்தையும் போதிய இடைவெளியில் gradual ஆக செய்ய வேண்டும். ரொம்ப பாஸ்ட்டா போகக்கூடாது.
Third Process: Mock Test >>>>> <<<<<< Recall
இதையெல்லாம் நாம் முடித்தவுடன் பயிற்சி மையங்களில் அளிக்கப்படும் மாதிரிக் கேள்விகளை செய்து பார்க்கலாம். இதனூடே நாம் Recall செய்து கொள்வது மிக முக்கியம்.
பொதுவாக எபிங்காஸ் கோட்பாட்டின்படி "20 நிமிடங்களுக்கு பின் கற்றதில் 47 சதவீதம் மறந்து விடும். ஒரு மணிநேரம் கழித்து 60 சதவீதமும், ஒன்பது மணிநேரத்தில் 70 சதவீதமும் பின்பு ஒரு மாதத்திற்குள் கிட்டத்தட்ட முழுவதும் மறந்து விடுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் .
எனவே நாம் Recall செய்வதை ஒரு சர்வே போல செய்தாலே போதும். காரணம் நாம் ஏற்கனவே பில்டிங்ம் பேஸ்மண்ட்ம் ஸ்டராங்காக போட்டிருப்பதால். நாம் Recall செய்யும் போது ஒரு சிலவற்றையும் இணைக்கவும் செய்யலாம். உதாரணத்துக்கு தலைவர்களின் பிறப்புகளை (some samples)
**************************************************************
1869-காந்தி
1879-பெரியார்
1889-நேரு
1899-உடுமலை நாரயணகவி/அம்புஜத்தமாள்
1909-அண்ணா
*************************************************************
1930 வருடம்-காமராஜர்-சாலை இளந்திரையன்-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
***************************************************************
திரு.வி.க1883-1953=70 Years (sep. 17 +53 =70)
***************************************************************
1908-ஜி.யூபோப்-இறப்பு:பசும்பொன்-பிறப்பு
***************************************************************
1891-அம்பேத்கர்-பாரதிதாசன் பிறப்பு
***************************************************************
1869-காந்தி
1879-பெரியார்
1889-நேரு
1899-உடுமலை நாரயணகவி/அம்புஜத்தமாள்
1909-அண்ணா
*************************************************************
1930 வருடம்-காமராஜர்-சாலை இளந்திரையன்-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
***************************************************************
திரு.வி.க1883-1953=70 Years (sep. 17 +53 =70)
***************************************************************
1908-ஜி.யூபோப்-இறப்பு:பசும்பொன்-பிறப்பு
***************************************************************
1891-அம்பேத்கர்-பாரதிதாசன் பிறப்பு
***************************************************************
Span of Attention ++ Discrimination ++ I.Q
இதற்கு அப்புறம் நாம் எச்சாமில் நுழையும் போது உதாரணத்துக்கு நடந்து முடிந்த தேர்வின் கேள்வியை எடுத்துக் கொள்ளுவோமே.
01.Span of Attention:
துணி கலையரசியால் தைக்கப்பட்டது- இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடுக்க
[A] கலையரசி துணி தைத்தாள்
[B] கலையரசி தைத்தாள் துணி
[C] கலையரசி என்ன தைத்தாள்
[D] கலையரசி துணியை தைத்தாள்
துணி கலையரசியால் தைக்கப்பட்டது- இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடுக்க
[A] கலையரசி துணி தைத்தாள்
[B] கலையரசி தைத்தாள் துணி
[C] கலையரசி என்ன தைத்தாள்
[D] கலையரசி துணியை தைத்தாள்
பொதுவாக நாம் நன்றாக தயாராகிருக்கும் போது இயல்பாகவே நம்முடைய கவனம் கூர்மையாகயிருக்கும். மேற்க்கண்ட கேள்வியை கண்டவுடன் [A] டக்ன்னு தேர்ந்தெடுக்க மாட்டோம். ஏனென்றால் நமக்கு நன்றாக தெரியும். செயப்பாட்டு வினையை செய்வினையாக மாற்றும்போது செயப்படுபொருளோடு “ஐ” என்ற இரண்டாம் வேற்றுமைஉருபு வரும் என்பது. (இயல்பான செய்வினைத் தொடரில் ஐ உருபு மறைந்தும் வரும் வெளிப்பட்டு வரும்.) இது Span of Attention. So No Silly Mistakes.
02.Discrimination
“இல்லை” என்பதன் இலக்கண குறிப்புத் தருக
[A] தெரிநிலை வினைமுற்று
[B] எதிர்மறை பெயரச்சம்
[C] குறிப்பு வினைமுற்று
[D] வியங்கோள் வினைமுற்று
“இல்லை” என்பதன் இலக்கண குறிப்புத் தருக
[A] தெரிநிலை வினைமுற்று
[B] எதிர்மறை பெயரச்சம்
[C] குறிப்பு வினைமுற்று
[D] வியங்கோள் வினைமுற்று
இதை பார்த்தவுடன் முதலில் நாம் பெயரச்சத்தை தூக்கி விடுவோம். அடுத்து வியங்கோள் வினைமுற்று. இப்ப நம்ம முன்னாடி நிற்பது தெரிநிலையா, குறிப்பா. நாம் இலக்கணத்தை ஒரளவு கற்றிருக்கும்போது நமக்கு ஒரு விஷயம் புலப்படும்.
குறிப்பு வினைமுற்று என்பது காலத்தைக் குறிப்பாக உணர்த்தும். இதில் காலம் உணர்த்தும் இடைநிலைகள் இடம் பெறா. மேலும் சில நேரம் குறிப்பு வினைமுற்று நன்று, தீது, காயன், எளியர் என்று பெரும்பாலும் குறுகிய வார்த்தைகளாலே வரும். இது எல்லாவற்றிற்கும் பொருந்தாது என்றாலும் இதை நாம் Discrimination மூலம் குறிப்பு வினைமுற்றை ஒர் கணிப்பில் தேர்ந்தெடுப்போம். +1 Bonus Mark
03. Intelligent Quotient
பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்
[A] முடியரசன்
[B] வாணிதாசன்
[C] சுரதா
[D] மோகனரங்கன்
பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்
[A] முடியரசன்
[B] வாணிதாசன்
[C] சுரதா
[D] மோகனரங்கன்
நாம் வாணிதாசன் பற்றி சரியாக படிக்க விட்டாலும் சரி, இந்தக் கேள்விக்கான தரவு நூலில் இல்லாவிட்டாலும் சரி, வாணிதாசன் பிறந்த ஊர் பாண்டிச்சேரி என்று மட்டும் தெரிந்தால் போதும் நம் I.Q ஆட்டமாட்டிக்காக [B] ஐ தேர்ந்தெடுக்கும். அதற்கப்புறம் Alandur, Madurai, Tanjore என மற்றவை உதிர்ந்து விடும். + 1 Posting Mark.
இப்படி இருந்திருக்கும் போது நம்மால் ஏன் தமிழில் 100-100 வாங்கியிருக்க முடியாது. கொஸ்டீன் எப்படியிருந்தாலும் சரி. (Either Easy or Tough) (Because 95% Questions Covered by Samacheer kalvi book). சிந்திப்போம். அடுத்த தேர்விலாவது தமிழில் மேல் மதிப்பெண் எடுப்போம்.
பி.கு: இது என்னுடைய தனிப்பட்ட தியரி மட்டுமே. இதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். இதை விட இன்னும் மேலான வழியில்.