இந்நிலையில், அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இடம் பெறவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனிடம் கேட்டபோது, அவர் கூறிய தாவது: "அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. உபரி ஆசிரியர் பணியிடங்களையும் ஆய்வுசெய்து காலியிடங்களின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும்" என்றார். இதற்கிடையே, பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,405 காலியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பாடவாரியான காலியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு: தமிழ் - 349; ஆங்கிலம் - 273; கணிதம் - 490; அறிவியல் - 773; சமூக அறிவியல் 520. இந்த காலியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பதவியில் உள்ள காலியிடங்களும் ஏற்கெனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு விரைவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Bank Account & Smartphone -ஐ மட்டுமே வைத்து சுலபமாக பணம் சம்பாதிக்கலாம்
இது 100% பாதுகாப்பானது. இது 100% எளிதானது, அது உண்மையில் மிகவும் வேகமாக இருக்கிறது.