Showing posts with label Tamilnadu Government Jobs. Show all posts
Showing posts with label Tamilnadu Government Jobs. Show all posts

Thursday, December 06, 2018

Direct Recruitment 2000 Field Assistant (Trainee) I.T.I.Holders Through Employment Exchange and Open Market Orders

Direct Recruitment 2000 Field Assistant (Trainee) I.T.I.Holders Through Employment Exchange and Open Market Orders


View Download

Wednesday, July 25, 2018

அரசு கலைக்கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி!


அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் காலிப்பணியிடம் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. புதிய பாடத்திட்டங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கலை அறிவியில் கல்வி பயில மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த கல்வியாண்டில் பொறியியல் கல்வியை விட அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதிலேயே மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது
இதனால் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கூடுதலாக 20 சதவீத இடம் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு அதில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்காண்டு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அதற்கேற்ப புதிய உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வந்தாலும் முழுமை பெறுவதில்லை. மாநிலத்தில் சுமார் 600 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப கவுரவ விரிவுரையாளர்களும் இல்லை. இதனிடையே கடந்த 2016-17ம் ஆண்டில் ஆயிரத்து 863 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த இடங்களும் நிரப்பப்படவில்லை. இவ்வாறாக சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு தேவைப்படுகின்றனர். இடையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 500 பேர் மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டனர். இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வும் அறிவிக்கப்படவில்லை.

சில அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் கெஸ்ட் லெக்சரர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் தற்காலிக ஆசிரியர்களை வைத்து சமாளிக்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவித்தபடி காலதாமதமின்றி ஆசிரியர்களை உடனே நியமிக்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Thursday, June 28, 2018

TNPSC - போட்டி தேர்வு அறிவிப்பு:



போட்டி தேர்வுகளின் தற்போதைய நிலவரங்களை, டி.என்.பி.எஸ்.சி., என்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்பட்ட போட்டி தேர்வு முடிவுகளை, விரைவில் வெளியிட தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

புது முயற்சியாக, 2016 மற்றும், 2017ல் நடத்தப்பட்ட தேர்வுகளில், நிலுவையிலுள்ள போட்டி தேர்வுகளின் முடிவுகளை வெளியிடும் தோராய கால அட்டவணை, ஜூன், 4ல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தேர்வு முடிவுகளின் தற்போதைய நிலை குறித்த விபரங்கள், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Monday, May 14, 2018

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் வேலை


மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 20 திறன்மிகு / ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Skilled Lab Assistant

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 என்ற ஊதியக்கட்டு ஏழாவது ஊதியக்குழு

காலியிடங்கள்: 20

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 36க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.gptcusilai.org என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதல்வர், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, உத்தப்பநாயக்கனூர், உசிலம்பட்டி, மதுரை - 625 537

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/Skilled%20Lab%20Asst.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Saturday, April 21, 2018

அனைத்து2009 &TET ஆசிரியர்களுக்கு

அனைத்து2009 &TET ஆசிரியர்களுக்கும் மாலை வணக்கம்.தமிழகத்தில் சில மாவட்டத்தில் பயிற்சி என்று கூறி,
நமது போராட்டக்குணத்தை திசை திருப்பவே கூறிவருகிறார்கள். அந்த பயிற்சி என்னவென்றால் *(புதுவை)பாண்டிச்சேரி-அரவிந்த் ஆசிரமம் பற்றி சேவைகுணங்கள்* பற்றியே. இப்பயிற்சியானது மிக முக்கியத்துவம் வாய்ந்து இல்லை...பயிற்சியை போராட்டம் முடிந்த பின்பு பார்த்துக்கொள்ளலாம்....அல்லது 

*பயிற்சியை பள்ளி துவங்கிய பின்பும் பெற்றுக்கொள்ளலாம்.* இது கலந்து கொள்ள வேண்டும் என்ற
*கட்டாயம் இல்லை.....*
இவண்
*2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்டக்குழு.*
*மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.

Gold Coast 2018 Commonwealth Games: Final Medal Tally

கோல்ட் கோஸ்ட் 2018 காமன்வெல்த் விளையாட்டு: இறுதி பதக்கம்

1. Australia- 198 (80 Gold)
2. England- 136 (45 Gold)
3. India- 66 (26 Gold)
4. Canada- 82 (15 Gold)




Join our  Whatsapp group

Saturday, April 07, 2018

TNPSC தேர்வுகள் மூலம் 320 சிவில் நீதிபதிகள் நேரடி நியமனம்:விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

தமிழ்நாடு நீதித்துறை பணியில் சிவில் நீதிபதிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக எழுத்துத்தேர்வும், நேர்முகத்தேர்வும் நடத்தப்படுகிறது. சட்ட பட்டதாரிகள், நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக பணியாற்றுபவர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள்சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வழக்கறிஞர்களுக்கு வயது வரம்பு 25 முதல் 35 ஆகவும், இடஒதுக்கீட்டின்கீழ் வருவோருக்கு (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி) அதிகபட்சம் 40 ஆகவும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சட்ட பட்டதாரிகளாக இருப்பின் குறைந்தபட்சம் 22 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். வயது வரம்பு இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் 27 ஆகும். படித்து முடித்து 3 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.எழுத்துத் தேர்வைப் பொருத்தவரையில், மொழிபெயர்ப்பு தாள் மற்றும் சட்ட பாடத்தில்3 தாள்கள் என மொத்தம் 4 தாள்கள் இடம்பெறும்.

கேட்கப்படும் கேள்விகளுக்கு விரிவாக பதில் எழுத வேண்டும். ஒவ்வொறு தாளுக்கும் தலா 100 மதிப்பெண் வீதம் மொத்தம் 400 மதிப்பெண். எழுத்துத்தேர்வில்தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதற்கு 60 மதிப்பெண். இறுதியாக, எழுத்துத்தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் பணிநியமனம் அமைந்திருக்கும்.கடந்த 2014-ம் ஆண்டு 162 சிவில் நீதிபதிகள் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வுசெய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டனர்.

 இந்த நிலையில், இந்த ஆண்டு 320 சிவில் நீதிபதி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிவில் நீதிபதி பதவியில் இவ்வளவு அதிகமான காலியிடங்கள் நிரப்பப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.






Tuesday, April 03, 2018

TNPSC Combined Subordinate Service Exam 2018 : Around 2500 vacancies.


TNPSC க்கான பட முடிவு
* Sub Registrar grade || : 35 vacancies.
.
* Municipal Commissioner grade ||: 8 vacancies.
.
* Assistant section officer : 20 vacancies.
.
* Assistant inspector in local fund audit : 120 vacancies.
.
* senior inspector of co operative - 100 vacancies.
.
* junior co operative auditor - 75 vacancies.
.
* revenue assistant - 150 vacancies.
.
* Accountant in treasuries - 100 vacancies.
.
Around 2500 vacancies notification soon on may 2 nd week. 





Saturday, March 10, 2018

TN-Horticulture Department 1000 Vacancies to be filled Soon through TNPSC




Courtesy: Dinamalar

TET- அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2018 பணியிடங்களில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம்


அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வின் மூலம் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

இப்போதைய நிலையில் சென்னை மாவட்டம் தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

  அதேநேரத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 2 ஆயிரத்து 533 பணியிடங்கள் உபரியாக உள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்தது. இதில் ஆயிரத்து 992 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 541 பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும். அந்த அடிப்படையில் உபரியாக உள்ள ஆயிரத்து 992 ஆசிரியர்கள், காலியாக உள்ள இடங்களில் விரைவில் பணியமர்த்தப்படுவர். அதன்படி 3 ஆயிரத்து 170 பணியிடங்களில் ஆயிரத்து 178 ஆக காலிப்பணியிடங்கள் குறையும். 

அதேபோல் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் மூலம் 840 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்தம் 2 ஆயிரத்து 18 பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Friday, March 09, 2018

மின் வாரிய பொறியாளர் பணி : 87ஆயிரம் பேர் விண்ணப்பம்

மின் வாரியத்தில், எழுத்து தேர்வு வாயிலாக, உதவி பொறியாளர்களை தேர்வு செய்யும் முடிவிற்கு, வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், 'எலக்ட்ரிக்கல்' பிரிவில், 300; 'சிவில்' பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களை, எழுத்து தேர்வு வாயிலாக நிரப்ப உள்ளது. இதற்காக, வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி, பிப்., 14ல் துவங்கியது. விண்ணப்பம் செய்வதற்கான அவகாசம், இம்மாதம், 6ல் முடிவடைந்தது. தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு, இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தேர்வுக்கு, 87 ஆயிரத்து, 378 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல் முறையாக, எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக, சமீபத்தில், உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட, 2,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நேர்முக தேர்வு மதிப்பெண் விபரங்கள், நேர்காணல் முடிந்த தினமே, மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு, ஊழியர்கள் தேர்வு, வெளிப்படையாக நடந்தது. இருப்பினும், சில அரசியல் கட்சிகள், நேர்காணல் தொடர்பாக, புகார் எழுப்பின.இதையடுத்து, எழுத்து தேர்வு வாயிலாக மட்டுமே, ஊழியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, பல தரப்பிலும், குறிப்பாக இளைஞர்களிடம், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் தான், 325 உதவி பொறியாளர் பதவிக்கு, 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
dinamalar

Wednesday, March 07, 2018

RESULT Posts included in Combined Civil Services Examination-II (Non-Interview Posts) (Group-II A Services)





Posts included in Combined Civil Services Examination-II
(Non-Interview Posts) (Group-II A Services) (2017-2018)
(Date of Written Examination: 06.08.2017 FN)
MARKS OBTAINED BY THE CANDIDATE AND RANK POSITION

           Enter Your Register Number :                                     

http://www.tnpsc.gov.in/ResultGet-g2a2017rank.html




Image may contain: text

Saturday, February 17, 2018

மாப்ள ஏதோ #*இரயில்வேத்துறை ல ஆள் எடுக்கிறாங்கலாமே* டா? அட ஆமாம் மச்சா, நீ விண்ணப்பிச்சிட்டீயா...?

மாப்ள ஏதோ #*இரயில்வேத்துறை ல ஆள் எடுக்கிறாங்கலாமே* டா?
அட ஆமாம் மச்சா, நீ விண்ணப்பிச்சிட்டீயா...?
இல்ல மாப்ள *விண்ணப்பம் எங்க வாங்கனும்*, தபாலில் அனுப்பனுமா..?
இரயில்வேக்கும் #TNPSC மாதிரிதான் *ONLINE* லதான் விண்ணப்பிக்க முடியும்.
எந்த தளத்துல மாப்ள விண்ணப்பிக்குறது...?
www.rrbchennai.gov.in இது மட்டுமே அதிகாரப்பூர்வமான இணைய பக்கம்.
சரி எவ்ளோ நாள் வரைக்கும் மாப்ள விண்ணப்பிக்கலாம்...?
10ம் வகுப்பு தகுதிக்கு 12/3/18(CEN 02/2018) வரையும், டிப்ளமோ-இஞ்சினியர் தகுதிக்கு 05/3/18(CEN 01/2018) வரையும் விண்ணப்பிக்கலாம்.
சரி மாப்ள விண்ணப்பிக்க *என்னென்ன சான்றிதழ்கள் தேவை*?
எந்த சான்றிதழும் #தேவை_இல்ல மச்சா( SC/ST தவிர), நாம தேர்வுல வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும்போது மட்டுமே சான்றிதழ்கள் தேவை.
அட அப்ப விண்ணப்பிக்கிறது ரொம்ப சுலபமா போச்சு மாப்ள.இன்னொரு சந்தேகம் இருக்கு நான் MBC, மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கனும்னா #OBC சான்றிதழ் தேவைனு சொல்லுறாங்களே...?
வேனும்தான் மச்சா, ஆனா இப்ப தேவை இல்ல தேர்வு லாம் முடிந்து நீ வெற்றி பெற்று கடைசியா சான்றிதழ் சரிபார்ப்பு சமயத்துல நீ கண்டிப்பாக கொண்டு சென்றால் போதும்.
அட நீ இப்படி சொல்ற மாப்ள ஆனா இணையத்துல விண்ணப்பிக்கும்போது OBCல CREAMY LAYERஆ/ NON CREAMY LAYER ஆ னு கேக்குதே?
நல்ல கேள்வி கேட்ட மச்சா, நாமெல்லாம் #NON_CREAMY_LAYERதான், ஆண்டு குடும்ப வருமானம் 8 லட்சத்துக்கும் அதிக உள்ளவங்க தான் CREAMY LAYER. இங்கே நீ கவனமா விண்ணப்பிக்கனும் தவறுதலாக நீ CREAMY LAYER னு குடுத்தீன்னா உனக்கு #OBC_சலுகைகள் கிடைக்காது.
நல்ல வேளை நீ சொன்னீயே மாப்ள. *சரி எத்தனை வயது வரை* விண்ணப்பிக்கலாம்..?
10ம் வகுப்பு தகுதி பணிக்கு 33வயது (OBC) வரையும் , டிப்ளமோ-இஞ்சினியர் தகுதி #LOCOPILOT பணிக்கு 31 வயது (OBC) வரையும் விண்ணப்பிக்கலாம்.
சரி மாப்ள நான் தேர்வுல பாஸ் பன்னுனதற்கு பிறகு என்ன தூக்கி #டெல்லி_பீகார் பக்கம் போட்றுவாங்களா....?
இப்படிலாம் உனக்கு யாரு மச்சான் சொன்னான். இந்திய இரயில்வே வை #17_மண்டலங்கலா பிரிச்சிருக்காங்க, நம்ம தமிழகம் தெற்கு இரயில்வே (SR) வில் வருகிறது.நீ விண்ணப்பிக்கும் போதே SOUTHERN RAILWAY #RRB_CHENNAI க்கு விண்ணப்பிச்சீனா, உனக்கு #வேலையும் கண்டிப்பாக தமிழகத்தில் தான் கிடைக்கும்.
முக்கியமான கேள்வி மாப்ள, எனக்கு #ஹிந்தி_இங்கிலீஷ் லாம் தெரியாது, தேர்வ எப்புடி எழுதுறது?
மச்சான் நம்ம #தாய்மொழி_தமிழ் ல தேர்வு எழுதலாம் டா, இது மம்தா பானர்ஜி இரயில்வே அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த சட்டம்.
அப்ப சூப்பர் மாப்ள நான் இன்னைக்கே விண்ணப்பிச்சுடுறேன்.*என்ன படிக்கனும்*..?? எத்தனை கேள்விகள் வரும் னு ??மட்டும் சொல்லிடு..நான் படிக்க துவங்கிடுறேன்.
#பொதுஅறிவு_கணிதம் மட்டும் பார்த்தா போதும், #100கேள்விகள்வரும் #90நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
நல்ல தகவல்லாம் சொன்ன நன்றி மாப்ள.நான் இன்னைக்கே விண்ணப்பிச்சுடுறேன்..
சரி மச்சான், தேர்வில் வெற்றி கிட்டட்டும்..விண்ணப்பிக்க போகும்போது உன் *புகைப்படும் மட்டும் 20-45KB* க்குள்ள ஸ்கேன் பன்னிட்டு போ, வேற எந்த ஆவணங்களோ கையெழுத்தோ ஸ்கேன் செய்ய #தேவையில்லை.

credit to 
செந்தில் குமார் 

Monday, January 22, 2018

கனரா வங்கியில் 450 புரபெசனரி அதிகாரி அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.




கனரா வங்கியில் 450 புரபெசனரி அதிகாரி வேலை பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் பணிவாய்ப்பு கனரா வங்கியில் 450 புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட கால பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் சேர்க்கப்படுவார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- பிரபலமான பொதுத்துறை வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. தற்போது இந்த வங்கியில், பயிற்சியுடன் கூடிய புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு (ஸ்கேல் 1) தரத்திலான இந்த பணிகளுக்கு மொத்தம் 450 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 227 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 121 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 67 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 35 இடங்களும் உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு-நேர் காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் பெங்களூருவில் உள்ள மணிப்பால் குளோபல் எஜூகேசன் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முதுநிலை வங்கிப் பணிகளுக்கான டிப்ளமோ பயிற்சி யில் சேர்க்கப்படுவார்கள். ஒரு ஆண்டு பயிற்சிக்குப் பின் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்படுவதுடன், புரபெசனரி அதிகாரியாக பணி நியமனமும் பெறலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-1-2018-ந் தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினர் 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. தேர்வு செய்யும் முறை: ஆன்லைன் ஆப்ஜெக்டிவ் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் மணிப்பால் வங்கிப் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.118-ம், மற்றவர்கள் ரூ.708-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.Canarabank.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-1-2018 அன்று விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 15-2-2018-ந் தேதி வரை விண்ணப்பத்தை பிரிண்ட் செய்யலாம். தேர்வுக்கான அழைப்புக்கடிதம் 20-2-2018-க்குப் பிறகு பதிவிறக்கம் செய்யலாம். 4-3-2018 அன்று இதற் கான ஆன்லைன் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Thursday, January 18, 2018

வேலைவாய்ப்பு: கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் பணி!

கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 4

பணியின் தன்மை: கம்ப்யூட்டர் ஆபரேட்டர்

கல்வித் தகுதி: கணினித் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசி தேதி: 02.02.2018.

மேலும் விவரங்களுக்கு http://ecourts.gov.in/sites/default/files/notification%20co%20final.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

Saturday, January 06, 2018

TN Housing Board Provisional List of Shortlisted Candidates called for Original Certificate Verification and Viva-Voce Interview

TNPSC - தமிழக அரசுப் பணியில் இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி மூலம் 3,235 காலியிடங்கள் நிரப்பப்படும்: வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு

இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக 3,235 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் அலுவலர்களும், ஊழியர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி அரசு ஊழியர்களைத் தேர்வுசெய்து வருகிறது.

முன்கூட்டியே திட்டமிடல்

ஓராண்டில் தமிழக அரசுப் பணியில் எந்தெந்த பதவிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன, அதற்கான தேர்வு எப்போது, தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும், நேர்முக்தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற விவரங்கள் எல்லாம் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி கடந்த 5 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது.இதன்மூலம், அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராவதற்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.மேலும் விவரங்களுக்கு..2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இந்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) தெரிந்துகொள்ளலாம். அதன்படி, இந்த ஆண்டு குரூப்-2 பதவிகள், தொழிலாளர் அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்,உதவி தோட்டக்கலை அலுவலர், மீன்வள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், அரசு உதவி வழக்கறிஞர், அருங்காட்சியக காப்பாட்சியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர் என 23 விதமான பதவிகளில் 3,235 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வுமுறை, பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

வழக்கமாக, டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில், என்ன தேர்வு, எப்போது அறிவிப்பு, எப்போது தேர்வு, தேர்வு முடிவுகள், நேர்முகத்தேர்வு ஆகிய விவரங்கள்இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்த முறை, தேர்வு, அதற்கான அறிவிப்பு, தேர்வு நாள் ஆகியவை மட்டுமே இடம்பெற்றுள்ளன. தேர்வு முடிவு நாள் விவரம் இடம் பெறவில்லை.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.