அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு | அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அதன்படி, பட்டதாரி ஆசிரியர் பதவியில் மட்டும் 2,223 காலியிடங்கள் உள்ளன. பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு: தமிழ்-299; ஆங்கிலம் - 237; கணிதம் - 468; அறிவியல் - 731; சமூக அறிவியல் - 488. ஆசிரியர் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில், 50 % நேரடி நியமன முறையிலும், 50 %பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது. வெயிட்டேஜ் முறையில், தகுதித்தேர்வு தேர்ச்சிக்கு 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட். மதிப்பெண்-க்கு 40 சதவீதமும் வெயிட்டேஜ் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
-
Pothu Arivu Ulagam – NOV 2017 https://userupload.net/w4nfnfujzifm Pothu Arivu Ulagam – OCTOBER 2017 https://userupload.net/0...
-
TRB தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.