Friday, March 09, 2018

தேர்வை தவறவிட்ட துப்பாக்கிச் சுடும் வீரருக்கு சிபிஎஸ்இ சிறப்பு சலுகை

சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்று தேர்வுகளை தவற விட்டதால், இந்திய இளம் வீரர் அனிஷ் பன்வாலாவுக்கு சிபிஎஸ்இ தனி தேர்வு தேதி அறிவித்து சலுகை வழங்கியுள்ளது.மெக்சிகோவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் தகுதிச்சுற்று போட்டியில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் அனிஷ் பன்வாலா 294 புள்ளிகள் பெற்று 3 வது இடம் பிடித்து இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

anish
தேர்வை தவறவிட்ட துப்பாக்கிச் சுடும் வீரருக்கு சிபிஎஸ்இ சிறப்பு சலுகை


Get up to Rs.1000 cashback! Link your bank account and do your first money transfer on #PhonePe. Use my link - https://phon.pe/ru_phonlx1m8

இந்நிலையில், துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்ற நாட்களில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடந்துள்ளது. துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றதால், இந்தி, சமூக அறிவியல், கணிதம் ஆகிய தேர்வுகளை அனிஷ் தவற விட்டுள்ளார்.

இது குறித்து சிபிஎஸ்இ-க்கு கடிதம் எழுதிய அனிஷ், தனக்கு தேர்வு எழுத மாற்று ஏற்பாடு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்ற சிபிஎஸ்இ, அனிஷ் பன்வாலாவுக்கு தனி தேர்வு தேதி அறிவித்து தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது. நன்றி 
samayam
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.