Friday, March 09, 2018

மின் வாரிய பொறியாளர் பணி : 87ஆயிரம் பேர் விண்ணப்பம்

மின் வாரியத்தில், எழுத்து தேர்வு வாயிலாக, உதவி பொறியாளர்களை தேர்வு செய்யும் முடிவிற்கு, வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், 'எலக்ட்ரிக்கல்' பிரிவில், 300; 'சிவில்' பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களை, எழுத்து தேர்வு வாயிலாக நிரப்ப உள்ளது. இதற்காக, வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி, பிப்., 14ல் துவங்கியது. விண்ணப்பம் செய்வதற்கான அவகாசம், இம்மாதம், 6ல் முடிவடைந்தது. தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு, இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தேர்வுக்கு, 87 ஆயிரத்து, 378 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல் முறையாக, எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக, சமீபத்தில், உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட, 2,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நேர்முக தேர்வு மதிப்பெண் விபரங்கள், நேர்காணல் முடிந்த தினமே, மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு, ஊழியர்கள் தேர்வு, வெளிப்படையாக நடந்தது. இருப்பினும், சில அரசியல் கட்சிகள், நேர்காணல் தொடர்பாக, புகார் எழுப்பின.இதையடுத்து, எழுத்து தேர்வு வாயிலாக மட்டுமே, ஊழியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, பல தரப்பிலும், குறிப்பாக இளைஞர்களிடம், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் தான், 325 உதவி பொறியாளர் பதவிக்கு, 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
dinamalar
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.