Friday, July 09, 2021

TNPSC தேர்வுக்கு ரெடியாகுறீங்களா?.. உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு.

 TNPSC நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு இணையவழி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(TNPSC) நடத்தப்படும் குரூப் 2 தேர்விற்கு 05.07.2021 திங்கட்கிழமை முதல் கட்டமில்லால் இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும், platform - cisco webex இணையவழி மூலமாகவோ அல்லது cisco app மூலமாக இணையவழி பயிற்சியில் நேரடியாகவும் இணையலாம்.

* பயிற்சியின்போது பாடக்குறிப்புகள் வழங்கப்படும்
* மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்
* அரசு அலுவலர்களை கொண்டு மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்படும்

இந்த பயிற்சியில் பங்கு பெற QR code மற்றும் மேலும் தகவலுக்கு அதற்கான வாட்சப் குரூப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான QR code ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு QR code இடம்பெற்றுள்ள அறிக்கை இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் ஏராளமான காலி பணியிடங்கள்.. வருகிறது புதிய அறிவிப்பு!

 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர், கணக்கீட்டாளர் ஆகிய பணியிடங்களுக்கு புதிதாக அறிவிப்பு வெளியிட்டு தகுதியான நபர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் கள உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன.

இந்நிலையில் 1,300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர், 600 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தவர்களை தேர்வு செய்ய, 2020-ம் ஆண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் கொரோனா தொற்று பரவியதால் தேர்வு நடத்தப்படவில்லை.

2900 பணியிடங்கள்


இதற்கிடையே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் 2,900 கள உதவியாளர் பணியிடத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக, அறிவிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, தேர்வு நடத்தப்படவில்லை.

அரசு திட்டம்

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், பழைய அறிவிப்புகளை ரத்து செய்துவிட்டு, புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, பணியாளர்களை தேர்வு செய்ய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

முக்கியமான பணி

இதனிடையே மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்குத் தேர்வெழுதியவர்களில் அதிக மதிப்பெண் பெற்றும் ஏறக்குறைய 5,000 பேருக்குப் பணி ஆணை இன்னும் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தள்ளது. மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிதான் முக்கியப் பணியாகும். மின் இணைப்புக் கேட்பவர்களுக்கு நேரில் சென்று இணைப்பைக் கொடுப்பது, மின்கம்பம் நடுவது, மின்கம்பம் ஏறுவது, மரம் வெட்டுவது, லைன் இழுத்துக்கொடுப்பதுபோன்ற பணிகளை செய்வார்கள்.

பணி வழங்கவில்லை

இவர்கள்தான் சென்னை போன்ற பெருநகரங்களில் பூமிக்கடியில் மின்சார வயர்கள் செல்வது, மின்பணிக்காகப் பள்ளம் தோண்டுவது, மின்வெட்டு பிரச்னை சரிசெய்யப்பட்ட பிறகு தோண்டிய பள்ளத்தை மூடுவது, ட்ரான்ஸ்ஃபார்மர்களைப் பழுதுபார்ப்பது எனப் பலவகையான பணிகளை கேங்மேன் வேலையாட்கள்தான் செய்யவார்கள். இந்த பணிக்கு தேர்வு எழுதி அதிகமதிப்பெண் பெற்ற சுமார் 5,000 பேருக்கு இன்னும் பணிவழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது தேர்வானவர்களில் 60 சதவீதம் பேருக்கு பணி வழங்கப்பட்டு 40 சதவீதம் பேருக்கு இன்னமும் பணி வழங்கப்படவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் போராடி வருகிறார்கள். ஆட்சி மாற்றம் நடந்துள்ளதால் தங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்

Thursday, January 07, 2021

TNPSC OFFICAL KEY GROUP1


                                  Download

                     

Monday, October 05, 2020

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு

 எஸ்ஐ தேர்வு இறுதி பட்டியலை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை


* பட்டியலை வெளியிடவோ, பணி நியமனம் 

செய்யவோ கூடாது என நீதிபதிகள் அறிவுரை


* தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு 

வாரியத்துக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

Wednesday, September 30, 2020

காவலர் தேர்வு 2020 தீயணைப்பு துறையில் கூடுதல் காலிப்பணியிடம் சேர்ப்பு.

 காவலர் தேர்வு 2020

தீயணைப்பு துறையில் கூடுதல் காலிப்பணியிடம் சேர்ப்பு.



Sunday, July 05, 2020

சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட் அமைக்க மானியம்.

இனி போன் பே (Phone Pe) மூலம் உணவு ஆர்டர் செய்துகொள்ளலாம் என போன் பே நிறுவனம் அறிவித்துள்ளது.

இனி போன் பே (Phone Pe) மூலம் உணவு ஆர்டர் செய்துகொள்ளலாம் என போன் பே  நிறுவனம் அறிவித்துள்ளது. https://phon.pe/ru_phonlx1m8
ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் போன் பே செயலியை தற்போது அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். சாதாரண கடைகளில் கூட போன் பே மூலம் பணம் செலுத்திக்கொள்ளும் வசதி வந்துவிட்டது.செல்போனிலேயே பணம் செலுத்த முடிவதால், போன் பே செயலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், போன் பே மூலம் ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்துகொள்ளலாம் என போன் பே நிறுவனம் 
https://phon.pe/ru_phonlx1m8அறிவித்துள்ளது.போன் பே ஸ்விட்ச் என்ற புதுவசதியை அறிமுகம் செய்துள்ள அந்நிறுவனம், உணவு ஆர்டர் செய்வது, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது, ஷாப்பிங் செய்வது என அனைத்தையும் போன் பே மூலம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதனால், ஒரே ஒரு செயலி மூலம் அனைத்தையும் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுhttps://phon.pe/ru_phonlx1m8 போன் பே செயலியின் இந்த அறிவிப்பால், பயனாளர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். தற்போது, இந்தியாவின் 520 நகரங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் இந்த வசதி பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும் போன் பே நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
NOW DOWNLOAD Google play store

விவசாய மின் இணைப்பு வழங்கல் 2020-2021

விவசாய மின் இணைப்பு வழங்கல் 2020-2021
#விவசாய_மின்_இணைப்பு_வழங்கல்_2020_21.

1.#சாதாரண_முதன்மை_வரிசையில். (Normal) 31.03.2003 வரையிலும்.

2.10,000 ரூபாய் திட்டத்தில் 31.03.2004 வரையிலும்.
 
3.25,000 & 50,000 ரூபாய் திட்டங்களில் 31.03.2020 வரையிலும்.

 
4.விரைவு தட்கல் திட்டத்தில் 31.08.2020 வரையிலும் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கும்
https://phon.pe/ru_phonlx1m8

5.அரசு இடஒதுக்கீடு திட்டங்களில்(தாட்கோ, முன்னாள் இராணுவத்தினர்,கைம்பெண், மாற்றுத்திறனாளி,கலப்புத் திருமணம்,பாரா மிலிட்டரி,இராணுவ சிப்பாய்,ST,BC,MBC,DC) பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கும்.

#விரைவில் மின் இணைப்பு வழங்கப்பட இருக்கிறது.ஆகையால்,மேற்கண்ட தேதி களுக்குள் பதிவு செய்தவர்கள். மின்இணைப்பு பெற தயார்நிலை செய்யுமாறும் சம்பந்தப்பட்ட பிரிவு.(அல்லது) செயற் பொறியாளர் அலுவலகங்களை அனுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#சாதாரண_வரிசை: 21837விண்ணப்பங்கள்.
#RSFS_10000: 1000 விண்ணப்பங்கள்.
#RSFS_25000: 215 விண்ணப்பங்கள்.
#RSFS 50000: 571 விண்ணப்பங்கள்.
#விரைவு_தட்கல்: 25000 விண்ணப்பங்கள்.
#தாட்கோ: 350 விண்ணப்பங்கள்.
#இதர_அரசு_இட_ஒதுக்கீடு: 1027 விண்ணப்பங்கள்.

#மொத்தம்: 50000 மின்இணைப்புகள்.... 

வழங்கப்படுகிறது.  Google play store

                                                          




Saturday, April 25, 2020

மே 3-ம் தேதிக்குப் பிறகு 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்: தமிழக அரசு

சென்னை: மே 3-ம் தேதிக்குப் பிறகு 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக விலகலை கடைப்பிடித்து இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திறன் வளா்ப்பு படிப்புகளை தொடங்க கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அழைப்பு

திறன் வளா்ப்பு படிப்புகளை வரும் கல்வி ஆண்டில் தொடங்க விருப்பமுள்ள கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான நிதியை வழங்கத் தயாராக உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் தேசிய திறன் தகுதியை மேம்படுத்தும் விதமாக திறன் வளா்ப்பு படிப்புகளுக்கு யுஜிசி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதற்காக, தேசிய திறன் தகுதி கட்டமைப்பின் (என்எஸ்க்யூஎப்) கீழ் திறன் அடிப்படையிலான கல்வியை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி அண்மையில் திருத்தம் செய்தது.

இந்தநிலையில், திறன் வளா்ப்பு படிப்புகளான சான்றிதழ் படிப்பு, பட்டச்சான்றிதழ் (டிப்ளமோ), முதுநிலை டிப்ளமோ, பி.வோக் (இளம்நிலை தொழில்), எம்.வோக்(முதுநிலை), ஆராய்ச்சி நிலை உள்ளிட்ட படிப்புகளை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது

அதன்படி, புதிய திறன் வளா்ப்பு பாடத்திட்டங்களை வரும் கல்வியாண்டு முதல் தொடங்க கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக யுஜிசி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திறன் வளா்ப்பு படிப்புகளை தங்களின் நிறுவனத்தில் வரும் கல்வியாண்டு முதல் தொடங்க விருப்பமுள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் முன்வரலாம். அதற்காக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆய்வகங்கள் அமைத்தல், கற்பித்தல் மற்றும் கற்றல் பொருள்களை கொள்முதல் செய்தல் உள்ளிட்ட ஆரம்ப கட்டமைப்புக்கு தேவையான நிதியை யுஜிசி வழங்கும். மேலும், திறன் வளா்ப்பு படிப்புகளை தொடா்ந்து தங்களின் நிறுவனத்தில் நீட்டிக்க தேவையான நிதி உதவியும் வழங்கப்படும். இதற்கு விருப்பம் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் யுஜிசி-யின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

விவசாய மின் இணைப்பை, எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்குவது தொடர்பாக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், வரைவு அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்டுள்ளது


விவசாய மின் இணைப்பில் மாற்றம் மக்களிடம் ஆணையம் கருத்து கேட்பு
*******************
Notification No. TNERC/DC/ 8- /dated .03.2020 


View Download
------------------------
விவசாய மின் இணைப்பை, எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்குவது தொடர்பாக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், வரைவு அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு இலவசமாக மின் வினியோகம் செய்கிறது. மின் வினியோகம் தொடர்பாக, மின் வாரியம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை, ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடுகிறது.தற்போது, விவசாய மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள், வேறு இடங்களுக்கு மாற்ற விரும்பினால், புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். விவசாயத்திற்கு பெற்ற மின்சாரத்தை, வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என, பல வழிமுறைகள் உள்ளன.
அவற்றில், மாற்றங்களை செய்ய, ஆணையம் முடிவு செய்துள்ளது.l அதன்படி, தமிழகத்திற்குள், விவசாய மின் இணைப்பை, எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்; இதற்கு ஏற்படும் செலவை, நுகர்வோர் ஏற்க வேண்டும்; மின் இணைப்பு பெற்ற, ஓராண்டிற்கு பின் தான் மாற்ற முடியும்l விவசாய மின்சாரத்தை தண்ணீர் இறைக்க மட்டுமின்றி, விவசாயம் சார்ந்த தொழிலுக்கும் பயன்படுத்தலாம்.
ஒரே சமயத்தில், இரு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது l விவசாய மின் இணைப்பு பெற, கிணற்றுடன், 0.5 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்l மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவருக்கு, மின் வாரியம் ஒப்புதல் கடிதம் வழங்கிய நிலையில், ஐந்து ஆண்டுகள் வரை விண்ணப்பம் உயிர்ப்புடன் இருக்கும்l மின் வாரியம் ஒப்புதல் வழங்கிய நிலையில், மின் இணைப்பு பெறுவதற்கு முன் அல்லது மின் இணைப்பு பெற்ற பின், மின் நுகர்வோரின் பெயரை மாற்றலாம்.
இந்த புதிய வழிமுறைகளை ஏற்படுத்த, அவை தொடர்பான வரைவு அறிக்கையை, ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றின் மீது, ஏப்ரல், 6ம் தேதி வரை, கருத்துக்கள், ஆலோசனை மற்றும் எதிர்ப்புகளை தெரிவிக்கலாம் என்றும், ஆணையம் தெரிவித்துள்ளது.
Source: dinamalar.

மே மாத ரேஷன் பொருட்களுக்கு 2, 3-ம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு மே மாதத்துக்கான இலவச அத்தியாவசியப் பொருட் கள் வழங்குவதற்கான டோக்கன் ஏப்.24, 25-க்குப் பதில் மே 2, 3-ம் தேதிகளில் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளதால் ஏழை மக்களின் சிரமங்களை உணர்ந்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான அத்தியா வசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், மே மாதத்துக்கும் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங் கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில், பொருட்கள் வாங்குவதற்கான டோக்கனை ஏப்ரல் 24, 25-ம் தேதிகளில் குடும்ப அட்டைதாரர்களின் வீடு களுக்கே சென்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

தேதி மாற்றம் தற்போது அதில் மாற்றம் செய் யப்பட்டுள்ளது. அதன்படி மே 2, 3-ம் தேதிகளில் டோக்கன் வழங்கப் படும். அந்த டோக்கன்களில் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டி ருக்கும். அந்த நாட்களில் ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ள லாம். இந்த தடைமுறை யின்படி மே 4-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

கடல் உணவு பொருட்களை online-ல் வாங்க தமிழக அரசின் ‘மீன்கள்’ செயலி...

முழு அடைப்பின் போது சென்னையில் உள்ள கடல் உணவு பிரியர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு ‘அரசு மீன் கடை’-களைச் சுற்றியுள்ள வீடுகளுக்கு கடல் உணவுகளை வழங்குவதற்காக ‘மீன்கள்(Meemgal)’ என்ற பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

முழு அடைப்பின் போது சென்னையில் உள்ள கடல் உணவு பிரியர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு ‘அரசு மீன் கடை’-களைச் சுற்றியுள்ள வீடுகளுக்கு கடல் உணவுகளை வழங்குவதற்காக ‘மீன்கள்(Meemgal)’ என்ற பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.சென்னையில் அண்ணா நகர், சாந்தோம், தேனம்பேட்டை மற்றும் விரும்பம்பாக்கத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் மீன் கடைகள் உள்ள நிலையில், இந்த பகுதிகளில் தற்போது இந்த பயன்பாடு மக்களுக்கு கடல் உணவு வகைகளை அளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


முழு அடைப்பின் போது வரிசைப்படுத்தும் செயல்முறையை எளிதாக்கும் பொருட்டு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், www.meengal.com என்ற வலைத்தளத்தின் மொபைல் பயன்பாட்டு பதிப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக அரசு முன்னர் குறைந்த அளவிலான கடல் உணவுகளுக்கு வீட்டு விநியோக சேவைகளை அளிக்க வலைத்தளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய லேண்ட்லைன் எண் 044-24956896-னை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் (TNFDC) முன்முயற்சியான இந்த சேவையானது, இந்த நடவடிக்கையை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக வீட்டு விநியோகத்திற்கான கூடுதல் இடங்களை உள்ளடக்கியுள்ளது. தற்போது, ​​5 கி.மீ சுற்றளவில் அண்ணா நகர், சாந்தோம், தேனம்பேட்டை, விருகம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான மீன் கடைகளைச் சுற்றி வாழும் மக்கள் முழு அடைப்பு காலத்தின் போதும் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தங்கள் ஆர்டர்களை பெறலாம்.

இந்த மொபைல் செயலி (அ) வலைத்தளத்தின் மூலம் கடல் உணவை ஆர்டர் செய்வதன் மூலம் அவர்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துமாறு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இந்த செயலியானது தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.
இந்த செயலி (அ) வலைதளத்தில் மக்கள் நெத்திலி, மதி (எண்ணெய் மத்தி), காரை போடி மற்றும் வவ்வல்உள்ளிட்ட பிற வகைகளின் மீன்களை பெறலாம்.  இனப்பெருக்க காலத்தில் (ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை) மீன்பிடித் தடை பூட்டப்பட்டதோடு, தமிழ்நாட்டின் மீன்பிடி சமூகத்திற்கு இரட்டை அடியாக வந்தது, இது வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்தது. ஏப்ரல் 14 ம் தேதி, மாநில அரசு பாரம்பரிய மீனவர்களுக்கு கடலுக்குள் செல்லவும், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து தங்கள் பிடிப்பை விற்கவும் அனுமதிக்கும் ஒரு அரசாங்க உத்தரவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.