Saturday, April 25, 2020

மே மாத ரேஷன் பொருட்களுக்கு 2, 3-ம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு மே மாதத்துக்கான இலவச அத்தியாவசியப் பொருட் கள் வழங்குவதற்கான டோக்கன் ஏப்.24, 25-க்குப் பதில் மே 2, 3-ம் தேதிகளில் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளதால் ஏழை மக்களின் சிரமங்களை உணர்ந்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான அத்தியா வசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், மே மாதத்துக்கும் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங் கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில், பொருட்கள் வாங்குவதற்கான டோக்கனை ஏப்ரல் 24, 25-ம் தேதிகளில் குடும்ப அட்டைதாரர்களின் வீடு களுக்கே சென்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

தேதி மாற்றம் தற்போது அதில் மாற்றம் செய் யப்பட்டுள்ளது. அதன்படி மே 2, 3-ம் தேதிகளில் டோக்கன் வழங்கப் படும். அந்த டோக்கன்களில் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டி ருக்கும். அந்த நாட்களில் ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ள லாம். இந்த தடைமுறை யின்படி மே 4-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.