Friday, July 09, 2021

TNPSC தேர்வுக்கு ரெடியாகுறீங்களா?.. உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு.

 TNPSC நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு இணையவழி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(TNPSC) நடத்தப்படும் குரூப் 2 தேர்விற்கு 05.07.2021 திங்கட்கிழமை முதல் கட்டமில்லால் இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும், platform - cisco webex இணையவழி மூலமாகவோ அல்லது cisco app மூலமாக இணையவழி பயிற்சியில் நேரடியாகவும் இணையலாம்.

* பயிற்சியின்போது பாடக்குறிப்புகள் வழங்கப்படும்
* மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்
* அரசு அலுவலர்களை கொண்டு மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்படும்

இந்த பயிற்சியில் பங்கு பெற QR code மற்றும் மேலும் தகவலுக்கு அதற்கான வாட்சப் குரூப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான QR code ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு QR code இடம்பெற்றுள்ள அறிக்கை இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.