Friday, September 15, 2017

தட்டச்சருக்கான முன்னுரிமை எப்படி கணக்கிடப்படுகிறது?

வணக்கம் நண்பர்களே,
குரூப்-4 (2016) தேர்வு முடிவு வெளிவந்த சமயம் படத்தில் உள்ள பதிவு எண் மற்றும் தட்டச்சருக்கான தரநிலை (Typist Rank) பற்றி சமூக வலைத் தளத்தில் பலர் ஐயமாக வினா எழுப்பி இருந்தனர்.
அதாவது, தரநிலையில் தவறு உள்ளது, இவர் 171 சரியான விடை அளித்தும் தட்டச்சருக்கு இந்த ரேங்க் வருமா? என்று பல வினாக்கள் எழுப்பப்பட்டு இருந்தது, என்னிடமும் பலர் தொடர்பு கொண்டு இது பற்றி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
நான் இது பற்றி எந்த தெளிவும் - அல்லது உண்மை நிலை அறியாமல் பதிவு செய்வது தவறு என்று எதுவும் செய்யவில்லை..



பின்னர், இந்த பதிவு எண்ணிற்கு சொந்தமான தங்கை என்னை தொடர்பு கொண்டு எனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த தரநிலை சரியா?, தவறு என்றால் என்ன நடவடிக்கை நான் எடுக்க வேண்டும்? என்று கேட்டார்.
அப்போது நான் அவரிடம் கலந்துரையாடிய பொழுது, சில விபரங்கள் தெரிய வந்தன.
அதாவது, தட்டச்சருக்கு, BOTH HIGHER (Tamil and English) முடித்தவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
உதாரணமாக ஒருவர் BOTH HIGHER என்றும் அவரது மதிப்பெண் 240 (160 சரியான விடை) என்றும் வைத்துக் கொள்வோம்.
மற்றொருவர் ஒரு Higher மற்றும் ஒரு Lower என்றும் அவரது மதிப்பெண் 270 (180 சரியான விடை) என்றும் வைத்துக் கொள்வோம்.
இப்பொழுது 240 மதிப்பெண் எடுத்தவரே முதல் ரேங்க் பெறுவார், 270 மதிப்பெண் எடுத்தவர் இரண்டாம் ரேங்க் பெறுவார்.
TNPSC விதிப்படி தட்டச்சருக்கான முன்னுரிமை கீழ்கண்டவாறு வழங்கப்படுகிறது:
1st Preference Goes to: Both Higher in Tamil and English
2nd Preference Goes to: Tamil higher and English Lower
3rd Preference Goes to: English Higher and Tamil Lower
அதாவது, முதலில் BOTH HIGHER முடித்தவர்களுக்கு மட்டும் அவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் போட்டு விட்டு,
அதன் பின்னர்
TAMIL HIGHER with ENGLISH LOWER உள்ளவர்களுக்கு போட்டு விட்டு,
மூன்றாவதாக
ENGLISH HIGHER with TAMIL LOWER உள்ளவர்களுக்கு போடுவார்கள்.
அந்த வகையில் இந்தத் தங்கை BOTH HIGHER முடிக்க வில்லை.
ENGLISH HIGHER யும், TAMIL LOWER யும் முடித்து முன்னுரிமையில் பின் தங்கி மூன்றாம் வகையில் உள்ளார்.
எனவே அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் இந்த தரநிலை சரியானதே.
எந்த குழப்பமும் இல்லை.
இவர் 171 சரியான விடைகளை அளித்துள்ளார். இவர் தட்டச்சில் BOTH HIGHER-யும் முடித்து இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தேர்வாகி இருப்பார். அதாவது BC Community ரேங்கில் 600 அருகே வந்து இருப்பார்.
அது இல்லாத காரணத்தினால் இந்த பின்னடைவு.
அவர் கடின உழைப்பிற்கு வர போகும் குரூப்-4 தேர்வில் BOTH HIGHER யும் முடித்து முழு பலத்துடன் தேர்வை எழுதி வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்.
தட்டச்சில் நேரடியாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை படிக்கலாம். இளநிலை (Lower) படித்து விட்டுத்தான் முதுநிலை (Higher) படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நான் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை முடித்து விட்டு பின்பு உயர்நிலை தட்டச்சு படித்தேன். கலந்தாய்வில் நான் நான்கு சான்றிதழ்களையும் அளித்தேன் ( 2 இளநிலை மற்றும் 2 முதுநிலை).
ஆனால் அவர்கள், இளநிலை சான்றிதழ்களை என்னிடம் திருப்பி கொடுத்துட்டு விட்டு முதுநிலை சான்றிதழை மட்டும் சரி பார்த்தார்கள்.
ஆனால், நீங்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது இளநிலை படித்து இருந்தால், இளநிலை மற்றும் முதுநிலை இரண்டையும் விண்ணப்பத்தில் காட்டவும். முதுநிலை மட்டுமே காட்ட வேண்டாம்.

நன்றி.
அன்புள்ள
அஜி
சென்னை.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.