Friday, September 15, 2017

ஓட்டுநர் உரிமம் & பதிவு புத்தகம் ஆண்ட்ராய்டு மொபைலில்

பல்வேறு தகவல்களை கீழ்காணும் சமூக தளங்களில் பின்தொடர்ந்தும் பெற்றிடலாம்.

https://123onlineportal.blogspot.in/
https://www.facebook.com/123-Online-Portal-110488992780750 


சாலையில் வாகனங்களை செலுத்த ஓட்டுநர் உரிமமும் (Driving License), வாகனம் நம்முடையது தான் என உறுதிபடுத்த பதிவு புத்தகம் (RC Book) அவசியமான ஆதாரங்களாக போக்குவரத்துத் துறையால் கருதப்படுகிறது. சாலையில் பயணிக்கும் போது போக்குவரத்து காவல் துறையால் அவ்வப்போது வழிமறித்து இவற்றை சோதனைக்கு உட்படுத்தப்படுவது நமக்கெல்லாம் சர்வசாதாரண நிகழ்வு தான். எப்போதும் வாகனத்தில் ஒரு நகல் வைக்கவேண்டிய கட்டாயம் இருப்பினும் அதை பின்பற்றுவதில் கவனக்குறைவு பெரும்பங்காற்றுகிறது.
டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு புத்தகம் நம் கைகளில் !
மத்திய சாலை, போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் mParivahan எனும் ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகம் செய்துள்ளது. mParivahan செயலியின் மூலம் வாகன எண்ணை கொண்டு அதன் உரிமையாளர், வாகன ரகம் மற்றும் அவ்வாகனம் பதிவாகியுள்ள கோட்டம் போன்ற தகவல்களை பெற இயலும். சாலை விபத்துக்களில் பொது மக்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு இவ்வசதி பெரும் துணை புரியும். வாகனங்களை மறு விற்பனை செய்வோர், வாங்குவோருக்கும் உதவும்.
மொபைல் எண்ணை உள்ளீடு செய்து கடவுச்சொல் பெறப்பட்டு பதிவு செய்துகொண்டு இச்செயலியில் நமது ஓட்டுநர் உரிம எண் & பதிவு புத்தக தகவல்களை உள்ளீடு செய்தால் டிஜிட்டல் தரவுகள் தோன்றும். அவற்றை பதிவிறக்கி செயலியிலேயே சேமித்து தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம். (Mind Voice: இதெல்லாம் சரி நம்ப போலீஸ் இதை காட்டினா விடுவார்களா? அதுக்கு நான் பொறுப்பு இல்லை). செயலியை பார்க்கையில் வரக்கூடிய காலங்களில் பல்வேறு வசதிகள் கூட்டப்படவிருப்பதாக தெரிகிறது.
செயலியை பதிவிறக்க @ https://userupload.net/puyyl1pkylr5


பல்வேறு தகவல்களை கீழ்காணும் சமூக தளங்களில் பின்தொடர்ந்தும் பெற்றிடலாம்.

https://123onlineportal.blogspot.in/
https://www.facebook.com/123-Online-Portal-110488992780750 

நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.