Wednesday, June 07, 2017

காவலர் தேர்வு: ஜூன் 20ல் 'ரிசல்ட்' தேர்வு முடிவுகள்

போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள், வரும், 20ல் வெளியாக உள்ளன.

போலீஸ், சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள, காவலர் நிலையிலான, 15 ஆயிரத்து, 711 இடங்களை நிரப்ப, சீருடை பணியாளர் தேர்வு வாரியம், ஜன., 23ல் அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, 50 திருநங்கையர் உட்பட, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான எழுத்துத் தேர்வு, மே, 24ல், மாநிலம் முழுவதும், 410 மையங்களில் நடந்தது; 5.80 லட்சம் பேர் தேர்வு எழுதினர்; 52 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை. சென்னையில், 56 தேர்வு மையங்களில், 41 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்த முடிவுகள், வரும், 20ல் வெளியாகலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

 போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'கான்ஸ்டபிள், எஸ்.ஐ., என, பல்வேறு நிலைகளில், 20 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. எனவே, மேலும், இரண்டாம் நிலை காவலர்கள் நிலையில், 5,000 பேரை தேர்வு செய்ய இருக்கிறோம்' என்றனர்.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.