வணக்கம் சகோதர-சகோதரிகளே,
தற்சமயம் பெரும்பாலானோரின் சந்தேகம், ஒருமுறை நிரந்தர பதிவை (One Time Registration) எப்படி புதுப்பிப்பது (RENEWAL) என்பதுதான்.
நான் சிறிது நேரத்திற்கு முன்பு TNPSC யுடன் இது பற்றி கேட்டபோது தெளிவான விளக்கம் கிடைத்தது.
அதாவது, தற்சமயம் உங்கள் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்கினை (One time registration id) ஓப்பன் செய்து பார்த்தால் உங்கள் கணக்கினை ஆரம்பிக்கப்பட்ட நாள், மற்றும் அது எக்ஸ்பியரி ஆகும் நாள் இரண்டையும் தற்போது காட்டும்.
இப்பொழுது உதாரணத்திற்கு உங்கள் எக்ஸ்பியரி ஆகும் நாள் அடுத்த வாரம் (05.05.2017) என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் நிரந்தர பதிவு கணக்கு எக்ஸ்பியரி ஆன மறுநாள் (06.05.2017) அதனை open செய்து பார்த்தல், RENEWAL என்ற புது பட்டன் இருக்கும்.
அந்த பட்டனை அழுத்தினால், ரூபாய் நூற்றி ஐம்பது கட்ட வேண்டி OPTION வரும். அந்த பணத்தினை மட்டும் நீங்கள் கட்டினால் போதுமானது. மீண்டும் புதிதாக நிரந்தர பதிவு கணக்கினை பதிய வேண்டிய அவசியம் இல்லை. புதிதாக எந்த தகவலும் கொடுக்க வேண்டாம். தற்பொழுது இருக்கும் புகைப்படமும், கையெழுத்தும் அப்படியே தொடரும்.
புதுப்பிப்பற்கு பணம் 150 மட்டும் கட்டினால் போதுமானது.
காலாவதி ஆகும் நாளுக்கு முன்னால் உங்களுக்கு அந்த பட்டன் தெரியாது. புதுப்பிக்கவும் முடியாது. காலாவதி தேதி முடிந்த பிறகு உங்கள் நிரந்தர பதிவு கணக்கினை சென்று பார்க்கவும்.
உங்களது நிரந்தர பதிவு தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த முறையை பின்பற்றலாம்.
உங்களது நிரந்தர பதிவில் பெயர், தகப்பனார் பெயர், கல்வித் தகுதி போன்றவற்றில் ஏதேனும் மாற்ற முடியாத தவறுகள் இருந்தால் நீங்கள் இந்த முறையில் புதிப்பிக்காமல் புதிதாக நிரந்தர பதிவு கணக்கினை தொடங்குவது நல்லது. மேலும், இன்னும் சில நாட்களில் அல்லது சில வாரங்களில் ஒருவரது நிரந்தர பதிவு கணக்கு காலாவதி ஆக போகிறது என்றால், கவலை வேண்டாம். நீங்கள் இன்றே GR 02A க்கு விண்ணப்பிக்கலாம். ஏனெனில் உங்களது நிரந்தர பதிவு இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது. இது TNPSC யிடம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல். இது போன்ற பற்றிய தகவல்களைக் காண http://www.ajitnpsc.com/ என்ற இணைய தளத்திற்கு செல்லவும். நன்றி. அன்புள்ள அஜி சென்னை.