I). SSLC QUALIFICATION:
--------------------------
1.தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதி (சான்றிதழில் குறியிடப்பட்டுள்ள இடத்தில் உள்ள தேதி. )
2. பயிற்று மொழி: தமிழில் படித்து இருந்தால் தமிழ் , ஆங்கிலத்தில் படித்து இருந்தால் ஆங்கிலம்.
(குறிப்பு: குரூப் -2, மற்றும் 2A தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்து இருந்து PSTM சர்டிபிகேட் வாங்கி வைத்து இருந்தால் அது உதவாது.
இந்த பத்தாம் வகுப்பு சான்றிதழ் என்பது குரூப்-4 மற்றும் VAO க்கு மட்டும் உதவும்.
குரூப்-1, குரூப்-2 மற்றும் 2A விற்கு பட்டப்படிப்பு (Degree) தமிழ் வழியில் படித்து இருக்க வேண்டும், பத்தாம் வகுப்பு அல்ல)
3. தேர்வுக்கு குழும பல்கலைக் கழகம்: படத்தில் குறியிடப்பட்டுள்ள இடத்தில உள்ள வாரியத்தின் பெயரினைக் குறிப்பிட வேண்டும்.
4. சான்றிதழ் எண்: படத்தில் குறியீட்டு காட்டப்பட்டுள்ள எண்.
5. தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து இருந்தால் "ஆம்", எனவும் இல்லை என்றால் "இல்லை" எனவும் கொடுக்கவும். (உங்கள் சான்றிதழில் தமிழ் பாடம் மற்றும் அதன் மதிப்பெண் இருந்தால் "ஆம்" என்று கொடுக்கவும்)
குறிப்பு: தமிழை ஒரு பாடமாக எடுத்துக் படிப்பது வேறு, தமிழ் வழியில் படிப்பது வேறு.
II) HSC QUALIFICATION:
--------------------------
1.தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதி (சான்றிதழில் குறியிடப்பட்டுள்ள தேதி )
2. பயிற்று மொழி: தமிழில் படித்து இருந்தால் தமிழ் , ஆங்கிலத்தில் படித்து இருந்தால் ஆங்கிலம்.
(குறிப்பு: குரூப் -2, மற்றும் 2A தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்து இருந்து சர்டிபிகேட் வாங்கி வைத்து இருந்தால் அது உதவாது. இந்த பத்தாம் வகுப்பு சான்றிதழ் என்பது குரூப்-4 மற்றும் VAO க்கு மட்டும் உதவும்.
குரூப்-2 மற்றும் 2a விற்கு பட்டப்படிப்பு (Degree) தமிழ் வழியில் படித்து இருக்க வேண்டும், பத்தாம் வகுப்பு அல்ல)
3. தேர்வுக்கு குழும பல்கலைக் கழகம்: படத்தில் குறியிடப்பட்டுள்ள இடத்தில உள்ள வாரியத்தின் பெயரினைக் குறிப்பிட வேண்டும்.
4. சான்றிதழ் எண்: படத்தில் குறியீட்டு காட்டப்பட்டுள்ள எண்.
5. தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து இருந்தால் "ஆம்", எனவும் இல்லை என்றால் "இல்லை" எனவும் கொடுக்கவும். (உங்கள் சான்றிதழில் தமிழ் பாடம் மற்றும் அதன் மதிப்பெண் இருந்தால் "ஆம்" என்று கொடுக்கவும்)
குறிப்பு: தமிழை ஒரு பாடமாக எடுத்து படிப்பது வேறு, தமிழ் வழியில் படிப்பது வேறு.
III) DEGREE QUALIFICATION:
--------------------------
பட்டபடிப்பிற்கு விண்ணப்பிக்கும் பொழுது Cumulative Mark sheet ஐ பயன்படுத்த வேண்டாம். கான்வோகேஷன் அல்லது புரவிசினல் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
உங்களிடம் கான்வோகேஷன் மற்றும் புரவிசினல் இந்த இரு சான்றிதழ்களில் எதன் ஒரிஜினல் இருக்கிறதோ அதனைப் பயன்படுத்தலாம்.
இரண்டிற்கும் ஒரிஜினல் இருப்பின் புரவிசினல் சான்றிதழைப் பயன்படுத்தலாம். இதன் காலம் ஆறு மாதங்கள் எனினும் TNPSC யில் ஏற்றுக் கொள்ளப்படும்.
DEGREE QUALIFICATION:
--------------------------
1.தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதி (சான்றிதழில் குறியிடப்பட்டுள்ள தேதி )
சிலருக்கு சான்றிதழில் தேதி இல்லை எனில், சீல் வைத்து இருப்பார்கள். அதில் உள்ள தேதியைக் கொடுக்கலாம்.
2. பட்டப் படிப்பின் பெயர்:
i) B.COM
ii) B.A (ECONOMICS)
iii. B.A Statiscs (or) B.SC Statistics
மேற்கண்ட மூன்று பட்டப் படிப்புகளைத் தவிர மீதமுள்ள பட்டப் படிப்புகள் அனைத்தையும் OTHER THAN ABOVE DEGREE என்ற ஆப்ஷனிலேயே பதிய வேண்டும்.
i) B.COM
ii) B.A (ECONOMICS)
iii. B.A Statistics (or) B.SC Statistics
ஆகிய மூன்று பட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றினைப் படித்தவர்கள்,
மற்றும் அதற்க்கு இணையான பட்ட படிப்புகளை படித்தவர்கள் மட்டுமே இந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்து பதிய வேண்டும். மற்றவர்கள் கூடாது.
மேற்கண்ட மூன்று பட்டபடிப்புகளுக்கு இணையான கல்வித் தகுதி என்னவென்பதை Group 2A நோட்டிபிகேஷன் PDFல் காணலாம்.
3. நீங்கள் பட்டம் பெற்ற பல்கலைக் கழகத்தின் பெயர்.
4. சான்றிதழ் எண்: படத்தில் குறியீட்டு காட்டப்பட்டுள்ள எண்.
5. தமிழை ஒரு பாடமாக எடுத்துக் பிடித்து உள்ளீர்களா?: பட்டப் படிப்பில் ஏதேனும் நான்கு செமெஸ்டர்களில் தமிழ் பாடம் படித்து இருந்தால் "ஆமாம்" என்று கொடுக்க வேண்டும். தமிழை எடுத்துக் படிக்கவே இல்லை என்றால் "இல்லை" என்று கொடுக்க வேண்டும்.
தமிழை ஒரு பாடமாக எடுத்துக் படித்தால் என்பது தமிழ் வழியில் படித்தால் ஆகாது. தமிழ் வழி என்பது அனைத்து சப்ஜெக்ட்களையும் தமிழ் வழியில் படித்து இருக்க வேண்டும்.
குறிப்பு:
------------
சிலருக்கு பட்ட சான்றிதழில் தேதி இல்லை என்றாலும், சீல் வைத்து இருப்பார்கள், அதில் உள்ள தேதியைப் பயன்படுத்தலாம்.
சான்றிதழ் எண், ஒவ்வொரு சான்றிதழைப் பொறுத்து, Certificate Number, Folio No, Serial Number என்று பல பெயரில் இருக்கும். குழப்பம் வேண்டாம்.
6. பயிற்று மொழி (PSTM)
------------------------------------------
பட்டப்
படிப்பில் அனைத்துப் பாடங்களையும் தமிழ் வழியில் படித்து இருந்தால்
அதற்க்கு உண்டான இட ஒதுக்கீட்டினைப் பெற விண்ணப்பிக்கலாம். அதற்க்கு,
கீழ்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.
1. TC
2. MARK SHEET
3. PROVISIONAL CERTIFICATE
4. CONVOCATION CERTIFICATE
5. PROVISIONAL CERTIFICATE
6. PSTM CERTIFICATE
இருப்பினும், PSTM சான்றிதழே நன்று.
1. TC
2. MARK SHEET
3. PROVISIONAL CERTIFICATE
4. CONVOCATION CERTIFICATE
5. PROVISIONAL CERTIFICATE
6. PSTM CERTIFICATE
இருப்பினும், PSTM சான்றிதழே நன்று.
PSTM CERTIFICATE FORMAT:
பட்டபடிப்பிற்கு PSTM சான்றிதல் வாங்க பயன்படுத்த வேண்டிய படிவம்
இதனை தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுதே கையில் வாங்கி விண்ணப்பிக்க வேண்டும். அப்போதுதான் இட ஒதுக்கீடு கிடைக்கும். தமிழ் வழியில் படித்து இருந்தாலும், விண்ணப்பத்தில் இல்லை என்று, குறிப்பிட்டு விட்டு பின்னர் சான்றிதழைக் கொண்டு சென்றால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
அண்ணா பல்கலைக் கழக சான்றிதழ்:
---------------------------------------------------------------
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் (BE) முடித்து இருப்பவர்களுக்கு, கான்வோகேஷனில் சான்றிதழ் எண் பின்னால் இருக்கும். அதனைப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். முகப்பில் உள்ள, உங்கள் பதிவு எண்ணைப் (Register number) போடாக் கூடாது.
இதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால், புரவிசினல் சான்றிதழ் வைத்து விண்ணப்பிக்கவும்.
தொழில் நுட்பத் தகுதி
----------------------------------------
தொழில் நுட்பத் தகுதியை பொறுத்தவரை, இந்த தேர்விற்கு தேவையான தொழில் நுட்பத் தகுதி என்பது, தட்டச்சர் (Typewriting) மற்றும் சுருக்கெழுத்து (Shorthand) இரண்டும் தேவை.
இரண்டும் (Both Typewriting and Shorthand) படித்து அதனை பதிவு பண்ணினால் மட்டுமே உங்களுக்கு விண்ணப்பத்தில் காட்டும். வெறும் தட்டச்சர் மட்டும் பதிவு பண்ணினால் விண்ணப்பத்தில் காட்டாது. எனவே குழப்பம் வேண்டாம்.
FOR ATTEMPT CASES:
------------------------------
ஒன்றிற்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வைத்து இருந்தால் (IF ATTEMPT CASE), அதனை நீங்கள்
பயின்ற பல்கலைக்கழத்திடம் விண்ணப்பித்து ஒரே சான்றிதழாக மாற்றிக் கொள்ளலாம்.
இதனை பின்னால் செய்து கொள்ளுங்கள், ஏனெனில் தற்சயம் நேரமில்லை.
எனவே, இறுதியாக உள்ள சான்றிதழின் எண்ணையும், தேதியும் கொடுத்து விண்ணப்பிக்கலாம்.
http://www.ajitnpsc.com/