பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது.
பள்ளி ஆய்வக உதவியாளர்
தேர்வு முடிவு எப்போது? ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்
ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது. 4500 ஆய்வக உதவியாளர் நியமன தேர்வை 8
லட்சம் பேர் எழுதினர்.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெகுநாட்களாக வெளியிடப்படாத நிலையில் ஓரிரு
நாட்களில் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு இம்மாதம் 31ம் தேதிக்குள்
பணிநியமனம் செய்யப்படுவார்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.|
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்
தேர்வு முடிவு எப் போது வெளியிடப்படும்? | அரசு மேல்நிலைப் பள்ளிகள்
மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர்
பணியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம்
31-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட் டது. இத்தேர்வை தமிழகம் முழு வதும்
8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வுக்கான குறைந்தபட்ச
கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் தேர்வெழுதிய வர்களில்
பெரும்பாலானோர் பட்ட தாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிந்து
ஏறத்தாழ 2 ஆண்டு கள் நெருங்கும் நிலையில் எழுத்துத்தேர்வின் முடிவு
இன்னும் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை
அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு குறித்து
நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அண்மையில்
தெரிவித்திருந்தார். பணி நியமன முறை குறித்து முடிவெடுக்கப்பட்டதும்
அதற்கான அடுத்த கட்டப் பணிகள் உடனே மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தனர். இந்நிலையில் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது.
