அன்பு நண்பர்களுக்கு வணக்கம் , வருகின்ற நாட்களில்
குருப் 4 முதல் குருப் 2 வரை அடுத்தடுத்து அறிவிக்கைகள் வெளியிடப்பட உள்ளன. எனவே அதை
கருத்தில் கொண்டு அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே அடிப்படையில் தேர்வுக்கு தயாராகும் படி
பாடத்திட்டத்தை தமிழிலும் மொழிபெயர்த்து அவற்றிற்கு என்னென்ன பாடபுத்தகங்கள் படிக்கவேண்டும்
என இதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் என்னுடைய அனுபவத்தில் இருந்து நான்
சொல்வது. இதை உங்களுக்கு ஏற்றமாதிரி வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவாக நீங்கள் தமிழில் 90 வினாக்களுக்கு
மேலாக விடையளிக்க முயற்சி செய்யவும் . பொது அறிவுப் பகுதியைப் பொறுத்தவரை 70 வினாக்களுக்கு
மேலாக விடையளிக்க வேண்டும் அப்போதுதான் உங்களால் வெற்றியடையமுடியும் . ஆயினும் ஒவ்வொருவரும்
180 வினாக்களுக்கு மேல் எடுக்க கடுமையாக முயற்சி செய்யுங்கள் .
பொதுவான அறிவுரைகள்.
முதலில் பள்ளிப்பாடப்புத்தகங்களை படிக்கவும் திருப்புதலுக்காக
மட்டுமே அல்லது ஏதேனும் கூடுதல் தகவலுக்காக வேறு நிறுவனத்தின் பாடக்குறிப்புகளை படிக்கவும்.
·
ஒரு நாளைக்கு
5- 7 மணி நேரம் படித்தால் போது உங்களால் வெற்றிபெற முடியும். சிலர் கூறுவது போல்
10 மணி நேரம் படிப்பதென்பது சிறந்ததாக இருக்காது. நாம் எவ்வளவு நேரம் படிக்கின்றோம்
என்பதை விட எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். மேலும் அனைத்து நாட்களிலும் உங்களால்
ஒரே போல் படிக்க இயலாது சில நாட்கள் அதிக நேரம் படிக்கலாம், சில நாட்கள் குறைவான நேரம்
படிக்கலாம் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அனைவரும் இது மாதிரி பிரச்சனையை எதிர்கொள்வர்.
·
பாடத்திட்டத்தை மையமாக வைத்தே படியுங்கள் அது உங்கள்
தயாரிப்பினை நெறிப்படுத்தும். முடிந்தால் நீங்கள் படிக்கும் இடத்தில் பாடத்திட்டத்தினை
நீங்கள் பார்க்கும் படி வைத்தால் சிறப்பாக இருக்கும்.
·
சிலர் பல்வேறு பயிற்சி மையங்களின் பாடக்குறிப்புகள்
( மெட்டீரியல்ஸ்) சேகரிப்பர் ஆனால் அவற்றை படிக்க மாட்டார்கள். எனவே நீங்கள் ஏதாவது
ஒரு பயிற்சி மையத்தின் பாடக்குறிப்பினை பயன்படுத்துங்கள்.
·
பொதுவாக மொழிப்பாடம் தமிழ்/ஆங்கிலம்/ மற்றும் அறிவுக்கூர்மை
மற்றும் நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் உங்களால் சரியாக 125 கேள்விகளுக்கு
இந்த மூன்று பகுதிகளில் இருந்து விடையளிக்க இயலும். இதை கவனத்தில் கொள்ளுங்கள்.
·
கூடுமானவரை பழைய வினாத்தாள்களை அடிப்படையாக வைத்து உங்கள்
தயாரிப்பினை மேம்படுத்துங்கள்.
·
பாடப்புத்தகம்
தவிர்த்து,மனோரமா பொது அறிவுப் புத்தகம், அல்லது விகடன் பொது அறிவுப் புத்தகம் , ஆங்கிலத்தில்
அரிஹந்த் அல்லது லூசெண்ட் பொது அறிவு புத்தகத்தில் ஏதாவது ஒன்றை நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டும்.
நீங்கள் இப்புத்தகத்தினை படித்தால் அதிகபட்சம் சராசரியை விட கூடுதலாக உங்களால் 15 வினாக்களுக்கு
சரியான விடையளிக்க வேண்டும். டாக்டர் சங்கர சரவணின் பொது அறிவுக் களஞ்சியம் என்ற புத்தகத்தையும்
வாசிக்க வேண்டும்
·
நாம் எவ்வளவுதான் படித்தாலும் தேர்வு நாளன்று நாம்
3 மணி நேரத்தில் எவ்வாறு விடையளிக்கப்போகிறோம் என்பதில் தான் இருக்கிறது அங்கு நாம்
பண்ணுகின்ற தவறு என்னவென்றால் கேள்வியை தவறாக புரிந்து கொண்டு விடையளிப்பது இதை தவிர்ப்பதற்காக
ஏதேனும் ஒரு வினாத்தாள் ( சக்தி அல்லது சுரா )தொகுப்பினை வைத்து ஒவ்வொரு வாரமும் பயிற்சி செய்யுங்கள்
.
·
பொது அறிவியல்
இயற்பியல்
பேரண்டத்தின் அமைப்பு-பொது அறிவியல் விதிகள்-புதிய உருவாக்கங்களும் ,கண்டுபிடிப்பும்-தேசிய அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள்-பருப்பொருள்களின் பண்புகளும்,இயக்கங்களும்,- இயற்பியல் அளவுகள்,அளவீடுகள் மற்றும் அலகுகள்-விசை,இயக்கம் மற்றும் ஆற்றல்-காந்தவியல்,மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல்-வெப்பம்,ஒளி மற்றும் ஒலி- அனு மற்றும் அனுக்கரு இயற்பியல்
படிக்கவேண்டிய
புத்தகங்கள்
ü 6 முதல் 10 வரை உள்ள அறிவியல் புத்தகம்
ü மனோராமா
பொது அறிவுப் புத்தகத்தில் உள்ள அறிவியல் பகுதி
ü 12 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் 6 மற்றும் 8 வது பாடத்தில் அடிப்படையான பகுதிகளை மட்டும் படிக்கவும்.
வேதியல்
தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்-அமிலங்கள் ,காரங்கள் மற்றும் உப்புகள்-செயற்கை-உரங்கள்-உயிர்கொல்லிகள்
நுண்ணுயிரிக்கொல்லிகள்- ஆக்ஸிஜனேற்றம்
மற்றும் ஒடுக்க வினைகள்-தாதுக்கள் மற்றும் உலோகங்களின் வேதியல்-கார்பன், நைட்ரஜன் மற்றும் அதன் கூட்டுப்பொருட்கள்.
ü 6 முதல் 10 வரை உள்ள அறிவியல் புத்தகம்
ü 11 வது வேதியியல் 8 வது பாடம் ( நைட்ரஜன் தொடர்பாக), 17 , 18 பாடங்கள்.
ü 12 வது வேதியியல் 21 ,22 பாடங்கள்.
உயிரியல்
வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள்-செல்லின் அடிப்படை பற்றிய அறிவியல்-உயிரினங்களின்
பல்வேறு வகைகள்-உணவூட்டம் மற்றும் திட உணவு.
ü 6 முதல் 10 வரை உள்ள அறிவியல் புத்தகம்
ü 11 வது தாவரவியல் பாட எண் 2,4,7 பாடங்கள் மட்டும்.
ü 12 வது தாவரவியல் பாட எண் 3,4, 6 மட்டும்.
விலங்கியல்
இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி- நாளாமில்லா சுரப்பி மண்டலம் அமைப்பு-இனப்பெருக்க அமைப்பு முறை-மரபியல் மற்றும் பாரம்பரிய அறிவியல்-சுற்றுச்சூழல்
மற்றும் சூழலியல்- உயிரிய நலம் மற்றும் சுகாதாரம்-பல்லுயிரின வேறுபாடும் அதன் பாதுகாப்பும்-மனித
நோய்கள் முன்தடுப்பு மற்றும் பராமரித்தல்-பரவும் தன்மையுள்ள
நோய்கள்-பரவாத் தன்மையுள்ள நோய்கள்.
ü 6 முதல் 10 வரை உள்ள அறிவியல் புத்தகம்
ü 12 வது விலங்கியல் 1, 5 மற்றும் 6 வது பாடம்.
ü 11 வது விலங்கியம் 3 வது பாடம் .
இந்தியப் புவியியல்
பூமியும் பேரண்டம்-சூரிய குடும்பம்-காற்று மண்டலம்- நிலக்கோளம்- நீர்க்கோளம்-பருவக்காற்று,மழைப்பொழிவு,காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலை-
நீர் வள ஆதாரங்கள்-இந்திய ஆறுகள்-மண் வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள்-காடுகள் மற்றும் வன உயிரிகள்-விவசாய முறைகள்-போக்குவரத்து மற்றும் தரைவழிப் போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம்-சமூகப் புவியியல்-மக்கட்தொகை அடர்த்தி மற்றும்
பரவல்-இயற்கைப் பேரழிவுகள்-பேரிடர்
நிர்வாகம்.
ü 6 முதல் 10 வரை புவியியல் பாடப்புத்தகம்
ü தமிழக
புவியியல் பற்றிய பகுதிகளுக்கு
தமிழ்நாடு பற்றிய பகுதியை மனோரமா பொது அறிவு புத்தகத்தில்
பார்க்கவும்.
ü மனோரமா
பொது அறிவுப் புத்தகத்தில் இந்தியா பகுதியில் மக்கள் தொகை,, போக்குவரத்து போன்ற பகுதிகளை பார்க்கவும்.
நடப்பு நிகழ்வுகள்
சமீபத்திய நடப்புகள்-தேசம் –தேசிய சின்ன்ங்கள் – மாநிலங்களின் குறிப்புகள்-தேசியப்பாதுகாப்பு மற்றும்
தீவிரவாதம் – பன்னாட்டு நிறுவனங்கள்-முக்கிய மாநாடுகள், நிகழ்வுகள்-பிரபல நபர்கள் – சமீபத்திய பிரபல இடங்கள்-விளையாட்டு ,கோப்பைகள்,போட்டிகள் தொடர்பானவை,முக்கிய புத்தகங்கள் மற்றும்
எழுத்தாளார்கள்-இந்திய மற்றும் சர்வேதசே அளவில் முக்கிய விருதுகள்-கலாச்சார நிகழ்வுகள்-வரலாற்று நிகழ்வுகள்-இந்தியா மற்றும் அண்டை நாடுகள் தொடர்பானவை-சமீபத்திய
கலைச்சொற்கள்-முக்கிய நியமனங்கள். இந்திய வெளினாட்டுக் கொள்கை-முக்கிய நீதிமன்றத்
தீர்ப்புகள்-பொதுத்தேர்தல் மற்றும் நடத்துவதில் உள்ள பிரச்சனைகள்-
இந்திய அரசியல் கட்சிகள் அமைப்பு மற்றும் செயல்பாடு-பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்-தன்னார்வ
தொண்டு நிறுவங்களின் பங்களிப்பு மற்றும் அரசு நிறுவங்கள்-அரசின்
சமூக நலத்திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள். புவியியல்
முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்-சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
சார்ந்த அரசு மற்றும் பன்னாட்டு நிறுவங்களின் கொள்கைகள்.
தற்போதைய சமூக-பொருளாதார பிரச்சனைகள்-புதிய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அரசு நிறுவங்கள். அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் தற்கால கண்டுபிடிப்புகள்-தற்கால உடல்நலம் சார்ந்த கண்டுபிடிப்புகள்-தகவல் தொழில்னுட்பம்
சார்ந்த நிகழ்வுகள்.
ü மனோரமா
பொது அறிவுப் புத்தகம்
ü மனானா
நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
குறிப்பு : அதாவது தேர்வுக்கு
எட்டு மாதங்கள் வரை ஏதாவது ஒன்றை தெளிவாக படித்தால் போதும் . நடப்பு நிகழ்வுகள் படிப்பதற்கு ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடமளிக்க
வேண்டாம்.
வரலாறு மற்றும்
பண்பாடு- இந்தியா/தமிழ்நாடு
சிந்து சமவெளி நாகரிகம்-குப்தர்கள்- டெல்லி சுல்தான்கள்- மொகலாயர்கள் மற்றும் மராட்டியர்கள்- விஜயநகர-
பாமினி பேரரசுகள் –தென்னிந்திய வரலாறு மற்றும்
பண்பாடு நாகரிகம்-சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியா-இந்தியப் பண்பாட்டின் தன்மைகள்-வேற்றுமையில் ஒற்றுமை-இனம், நிறம்,மொழி மற்றும்
பழக்க வழக்கங்கள்-மதச்சார்பற்ற நாடு-கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகள்-பகுத்தறிவாளர்கள்
எழுச்சி-தமிழ்நாட்டில் திராவிட இயக்கம்-அரசியல் கட்சிகள் மற்றும் அதன் பிரபல திட்டங்கள்- ஐரோப்பியர்களின் வருகை-பிரிட்டிஷ் ஆதிக்கம் ஆட்சி.பிரிட்டிஷாரின் ஆட்சியினால்
சமூக-பொருளாதார-பண்பாட்டு மாற்றங்கள்-இந்திய சமூகச் சமய சீர்திருத்த இயக்கங்கள் எழுச்சி- கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகள்-பல்வேறு துறையில்
முக்கியமான பிரபலங்கள்-கலை-அறிவியல்-இலக்கியம்-தத்துவம்-அன்னை
தெரசா- விவேகானந்தர்- பண்டித ரவிசங்கர்-
எம். எஸ் சுப்புலட்சுமி- ருக்மனி அருண்டேல்-ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.
இந்திய தேசிய இயக்கம்
தேசிய மறுமலர்ச்சி-1857கு முன் பிரிட்டிஷாருக்கு
ஏற்பட்ட எழுச்சி-1857 பெருங்கலகம்-இந்திய தேசிய காங்கிரஸ்-தேசியத் தலைவர்களின் எழுச்சி-காந்தி, நேரு, தாகூர்-
நேதாஜி- தேசிய போராட்ட்த்தின் பல்வேறு நிலைகள்-பல்வேறு சட்டங்கள்-உலகப் போர்கள் அதன் இறுதி நிலை
– மதவாதமும் தேசப்பிரிவினையும்-சுதந்திரப்போராட்ட்த்தில்
தமிழ்நாட்டின் பங்களிப்பு-ராஜாஜி-வ.உ.சிதம்பரனார்-பெரியார்-பாரதியார் மற்றும் பலர்- அரசியல் கட்சிகள் மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தையை அரசியல் முறை,
ü 6 முதல் 10 வரை உள்ள வரலாறு( 9 வது வரலாறு நீங்கலாக ஏனென்றால் உலக வரலாறு பாடத்திட்டத்தில் இல்லை)
ü 11 வது வகுப்பு மற்றும் 12வது வகுப்பு வரலாறு (குறிப்பிட்ட பாடம் மட்டும் பாட்த்திட்டத்தின்
அடிப்படையில் படிக்கவும், முழுவதும் படித்தால் நல்லது)
இந்திய அரசியல்
அமைப்பு
இந்திய அரசியல் அமைப்பு-அரசியலைப்பின் முகவுரை-அரசியலைப்பின் சிறப்பியல்புகள்-மத்திய – மாநில மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகள்-குடியுரிமை-அடிப்படை உரிமைகள் –கடமைகள்-மனித உரிமைப் பட்டயம்-மத்தியச் சட்டமன்றம்-பாராளமன்றம்-மாநிலச் சட்ட மன்றம்- உள்ளாட்சி அரசு- பஞ்சாயத்து ராஜ்-தமிழ் நாடு- இந்திய நீதித்துறையின் அமைப்பு- சட்டத்தின் ஆட்சி-
முறையான சட்ட அமைப்பு- தேர்தல்கள்-
அலுவலக மொழி மற்றும் 8வது அட்டவணை-பொது வாழ்வில் ஊழல்- ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்-மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்-லோக் அதாலத்-
குறைதீர்ப்பாளர்- கணக்குத் தணிக்கை அலுவலர்-
தகவல் அறியும் உரிமை-மத்திய மாநில ஆணையங்கள்
பெண்கள் முன்னேற்றம்- நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்-
அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்- நிர்வாகச் சீர்திருத்தங்கள்.
ü 6 முதல் 10 வரை
உள்ள குடிமையியல் பகுதி
ü 12 வது வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்
ü பாக்யா பயிற்சிப் பட்டரையின் அரசியலைப்பு
புத்தகம்
இந்தியப் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதரத்தின் இயல்புகள்-ஐந்தாண்டு திட்டங்கள்-மாதிரிகள்-மதிப்பீடு- நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை-வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு-தொழில் வளர்ச்சி-
கிராம நலம் சார்ந்த திட்டங்கள்- சமூகம் சார்ந்த
பிரச்சனைகள்- மக்கள் தொகை – கல்வி
– சுகாதாரம்- வேலைவாய்ப்பு- வறுமை- தமிழகத்தின் பொருளாதார நிலை- ஆற்றல் மற்றும் அதன் பல்வேறு மூலங்கள்
மற்றும் வளர்ச்சி- நிதிக்குழு-தேசிய
வளர்ச்சி குழு-திட்டக்குழு – வறுமை
ஒழிப்புத் திட்டங்கள்- தொழில்
வளர்ச்சி-மூலதன் ஆக்கம் மற்றும் முதலீடுகள்-பொதுத்துறை நிறுவங்களின்
பங்களிப்பு மற்றும் பங்கு விலக்கல்-அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு-தேசிய வருமானம்.
ü 11 ஆம் வகுப்பு இந்திய பொருளாதாரம்
ü 12 ஆம் வகுப்பு இந்தியப் பொருளாதாரப் புத்தகம் கடைசி இரண்டு பாடங்கள் மட்டும்.
ü அரிகண்ட்
பொது அறிவுப் புத்தகத்தில் உள்ள பொருளாதாரப் பகுதி
அறிவுக் கூர்மைப் பகுதி
கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை தகவலாக மாற்றுதல்-புள்ளிவிவரம் சேகரித்தல்- வகைப்படுத்துதல் மற்றும்
அட்டவனைப் படுத்துதல்-குழு-வரைபடம்
மற்றும் விளக்கபடம்-முழுமைத் தொகுதியாக தகவல்களை தெரிவித்தல்-கொடுக்கப் பட்ட தகவல்களை பகுப்பாராய்வு செய்தல்- சதவீதம்-மீ.பெ.வ. மற்றும் மீ.சி.ம, விகிதம் மற்றும் விகிதாச்சாரம்- தனிவட்டி-கூட்டு வட்டி- பரப்பளவு-கன அளவு- நேரம்
மற்றும் வேலை-தர்க்க அறிவு-புதிர்கள்-
பகடை தொடர்பானவை- படம் தொடர்பான தர்க்க அறிவு – எண் முறை தொடர்பானவை-
முடிவெடுத்தல் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல்.
ü பாடப்புத்தகத்தில்
உள்ள கணக்குகள்
ü கணியன்
கணிதப்புத்த்கம் ( தமிழில் மட்டுமே உள்ளது)
ü பழைய
வினாத்தாளில் உள்ள வினாக்களை பயிற்சி செய்தால் போதும்.
பொதுத்தமிழ்
பகுதி - (அ)
இலக்கணம்
1.
பொருத்துதல்: பொருத்தமான பொருளைத் தேர்வு
செய்தல்- புகழ் பெற்ற நூல் நூலாசிரியர
2.
தொடரும் தொடர்பும் அறிதல் -இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்--அடைமொழியால்
குறிக்கப்பெறும் நூல்
3.
பிரித்தெழுதுக
4.
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
5.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
6.
பிழைதிருத்தம் --சந்திப்பிழையை நீக்குதல் --ஒருமை பன்மை -
பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை
நீக்குதல் - பிறமொழிச் சொற்களை நீக்குதல்
7.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்
சொல்லை அறிதல்
8.
ஒலி வேறுபாடறிந்து சாpயான பொருளையறிதல்
9.
ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
10.
வேர்ச்சொல்லை தேர்ந்தெடுத்தல்
11.
வேர்சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயா;, தொழிற்பெயரை –உருவாக்கல்
12.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
13.
சொற்களை ஒழுங்குபடுத்தி
சொற்றொடராக்குதல்
14.
பெயர்ச்சொல்லின் வகையறிதல்
15.
இலக்கணக் குறிப்பறிதல்
16.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல
17.
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிதல்
18.
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு
வினை வாக்கியங்களைக் கண்டறிதல்
19.
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான
பொருளைத் தேர்ந்தெடுத்தல்
20.
எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்
பகுதி (ஆ)
இலக்கியம்
1.
திருக்குறள் தொடா;பான செய்திகள், மெற்கோள்கள் தொடரை நிரப்புதல்
(பத்தொன்பது அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு,
அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை,
காலம், வலி, ஒப்புரவறிதல்,செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக்கொடல், பொருள் செயல்வகை,
வினைத்திட்பம், இனியவை கூறல்
2.
அறநூல்கள் நாலடியார் நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம, ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்,
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
3.
கம்பராமாயணம் - தொடர்பான செய்திகள்
மேற்கோள்கள், பா வகை, சிறந்த
தொடர்கள்.
4.
புறநானூறு - அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள்,
மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
5.
சிலப்பதிகாரம்-மணிமேகலை - தொடர்பான
செய்திகள், மேற்கோள்கள் சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள்
மற்றும் ஐம்பெரும் - ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
6.
பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம்
- திருவிளையாடற்புராணம் - தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
7.
சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி
- கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது,
நந்திக்கலம்பகம் -விக்கிரமசோழன் உலா, முககூடற்பள்ளு,
காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி,
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்தலகெம்
குறவஞ்சி, அழகா; கிள்ளைவிடுதூது,
இராகூராகூன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.
8.
மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில்பாட்டு
- இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்- அழகிய சொக்கநாதர் தொடர்பான
செய்திகள்).
9.
நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள்
தொடர்பான செய்திகள்.
10.
சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர்,சுந்தரர், மாணிக்கவாசகர்;,
திருமூலர்;, குலசேகர ஆழ்வார்;, ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார்;, எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர்,தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.
பகுதி – இ
தமிழ்
அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
1.
பாரதியார்,பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
2.
மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா. கண்ணதாசன், உடுமலைநாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.
3.
புதுக் கவிதை - ந.பிச்சமுர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா,
ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான்,
கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன,; சாலினி இளந்திரையன, ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்,
சிறப்புத் தொடர்கள் மற்றும் புதிய நூல்கள்.
4.
தமிழில் கடித இலக்கியம் -
நாட்குறிப்பு: நேரு - காந்தி - மு.வ. அண்ணா--ஆனந்தரங்கம்
பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.
5.
நாடகக்கலை - இசைக்கலை தொடர்பான
செய்திகள்
6.
தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் – பொருத்துதல்
7.
கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு -
திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.
8.
தமிழின் தொன்மை - தமிழ் மொழியின்
சிறப்பு திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
9.
உரைநடை - மறைமலையழகள் - பரிதிமாற்கலைஞா; ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப்
பிள்ளை, திரு.வி.க. வையாபுரிப்பிள்ளை - மொழி நடை தொடர்பான
செய்திகள்..
10.
உ.வெ.சாமிநாத ஐயா;, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்;, சி.இலக்குவனார்;
- தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
11.
தேவநேயப்பாவாணா; - அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார்;,
தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.
12.
ஜி.யு.போப் - வீரமாமுனிவர்; தமிழ்ததொண்டு சிறபபுத் தொடர்கள்
13.
பெரியார்; - அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் - அம்பேத்கார்
- காமராசர்- சமுதாயத் தொண்டு.
14.
தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
15.
உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் -
பெருமையும் - தமிழ்ப் பணியும்.
16.
தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்
தொடர்பான செய்திகள்
17.
தமிழக மகளிரின் சிறப்பு - அன்னி
பெசண்ட் அம்மையார்;, மூவலூர்; ராமாமிர்தத்தம்மாள்,டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி - விடுதலைப்
போராட்டத்தில் மகளிர் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, ராணி
மங்கம்மாள்)
18.
தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் -
கடற் பயணிகள் - தொடர்பான செய்திகள்
19.
உணவே மருந்து - நோய் தீர்க்க்கும்
மூலிகைகள் தொடர்பான செய்திகள்.
20.
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர்;, இராமலிங்க அடிகளார்,; திரு.வி. கல்யாண
சுந்தரனார்; தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள
படிக்கவேண்டிய
புத்தகங்கள்
ü 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகம்
ü ஏதாவது
ஒரு தமிழிலக்கிய வரலாறு (முனைவர் தேவிரா- டாக்டர் பாக்கியமேரி- எம்மார் அடைக்கலசாமி
– ( என்னைப் பொருத்தவரை பாலசுப்ரமணியன் புத்தக்ம் மிக அருமையாக உள்ளது)
ü பழைய
வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கான விடையையும் சேர்த்து கூடுதலாகப் படித்தால் உங்களால்
தமிழில் 90 வினாக்களுக்கு மேல் சரியாகப் விடையளிக்க முடியும்.