Monday, February 27, 2017

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி: மார்ச் 9 முதல் நேர்காணலுக்கு அழைப்பு

 ஆசிரியர் பணி: மார்ச் 9 முதல் நேர்காணலுக்கு அழைப்பு
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் சென்னைக் குழுமத்தின் ஐஐடி, சிஎல்ஆர்ஐ மற்றும் ஐலண்ட் கிரவுண்ட் பள்ளிகளில் (2017-18-ஆம் கல்வி ஆண்டு) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு வரும் மார்ச் 9 ஆம் தேதிமுதல் 11-ஆம் தேதி வரை காலை 8.45 முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் பங்குகொள்ளலாம்.
09.03.2017 - அன்று விளையாட்டு மற்றும் ஓவியம், கலை, கைவினை, இசை, பாட்டு மற்றும் நடன டேட்டா என்டரி ஆப்ரேட்டர்கள், கணினி இயல் பயிற்றுவிப்பவர்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:கே.வி.ஐ லண்ட் கிரவுண்ட் (தீவுத்திடல்) சென்னை - 02. தொலைப்பேசி எண். 044-25360191
10.03.2017 - அன்று யோகா ஆசிரியர்கள், மருத்துவர்கள், முழு நேரம் செவிலியர், ஆலோசகர், பிராந்திய மொழி (தமிழ்) மற்றும் ஜெர்மன் தவிர வெளிநாட்டு மொழி ஆசிரியர்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:கே.வி.சி.எல். ஆர்.ஐ., அடையார், சென்னை-20. தொலைப்பேசி எண். 044-24421219
11.03.2017 - அன்று துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி அனைத்து பதிவு ஆசிரியர்கள்
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:கே.வி.ஐஐடி கிண்டி, சென்னை-36. தொலைப்பேசி எண். 044-22570907
மேலும் தகுதி, பணி அனுபவம் மற்றும் சம்பளம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.