Thursday, August 02, 2018

CTET - ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கான, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு,
இன்று முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


கேந்திரிய வித்யாலயா போன்ற, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசு நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வுக்கான அறிவிப்பை,மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.இதன்படி, www.ctet.nic.in என்ற இணையதளத்தில், இன்று முதல், ஆக., 27 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மொத்தம், 92 நகரங்களில், 20 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.