மாப்ள #இரயில்வேத்தேர்வுக்கு விண்ணப்பிக்கிறதுல #நிறைய_மாற்றங்கள் செஞ்சிருக்காங்கலாமே என்னடா அதெல்லாம்..???
ஆமாம் மச்சா நிறைய மாற்றங்கள், #வயது_வரம்பில் அனைத்து பிரிவினருக்கும் #இரண்டு_ஆண்டுகள் உயர்த்திருக்காங்க, #குருப்_டி போஸ்டுக்கு #கல்வித்தகுதில மாற்றம் பன்னியிருக்காங்க, பரிட்சை எழுதினா #400ரூ திருப்பி தருவார்கலாம், முக்கியமா #ALP__TECHNICIAN மற்றும் #GROUP_D LEVEL-1 இரண்டுக்குமே விண்ணப்பிக்கிறதுக்கு 31/3/2018 வரை #கால_நீட்டிப்பு செய்திருக்கிறார்கள்.
சூப்பர் மாப்ள அப்ப மார்ச் 31,2018 வரைக்கும் விண்ணப்பிக்கலாம்னு சொல்லு.. சரி குருப்-டி LEVEL-1 போஸ்டுக்கு விண்ணப்பிக்கிறதுல என்ன மாற்றம் செஞ்சிருக்காங்க..??
இத கொஞ்சம் கவனமா கேளு மச்சா..அறிவிப்பு வெளியிடும்போது 90% காலிபணியிடங்களுக்கு 10ம் வகுப்போட #ITI_யும் படித்திருக்க வேண்டும் எனவும். வெறும் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 10% பணியிடங்கள் அதாவது மூன்று பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என நிர்ணயித்திருந்தார்கள்.......ஆனா பீகார் காரனுங்க பன்ன போராட்டத்துக்கு பிறகு குருப்-டி யில் உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் 10ம் வகுப்பு தகுதியே போதும் என மாற்றியமைத்துவிட்டார்கள்....அதனால இனிமே புதுசா விண்ணப்பிப்பவர்கள் #அனைத்து_பதவிகளுக்கும் முன்னுரிமை தேர்வு செய்யலாம்...
அட என்ன மாப்ள இப்படி சொல்ற நான் தா முன்னாடியே விண்ணப்பிச்சிட்டேனே, 10ம் வகுப்பு தகுதிக்கு மூன்று பதவிகள் மட்டுந்தான காட்டுச்சு, இப்ப நான் எப்படி எல்லா பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கிறது.???
ஒன்னும் பிரச்சினை இல்ல மச்சா எப்பவும் போல www.rrbchennai.gov.in -->CEN 02/2018-->CLICK HERE-ONLINE APPLICATION----> Modification of Post Preference, Bank account Details & Exam Language இந்த ஆப்ஷன்ல போய் நீ அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பதோடு பதவி முன்னுரிமையும் கொடுக்கலாம்.ஏறத்தாழ 9 பதவிகள் இருக்கும் , அதற்கு உன் விருப்பப்படி 1 2 3 ...9 முன்னுரிமை அமைக்கனும்.இதற்கு கட்டணங்கள் எதுவும் செலுத்த தேவையில்லை.
சரி மாப்ள நான் இன்னைக்கே EDIT பன்னியிடுகிறேன்..அப்றம் பரிட்சை எழுதினா தேர்வுகட்டணம் திருப்பி தருவாங்கனு சொன்னியே, அதெப்படி மாப்ள????
ஆமாம்டா நீ ஏற்கனவே 500/250ரூ செலுத்தியிருந்தல்ல,இதுவே நீ தேர்வுல கலந்துகிட்டினா உனக்கு 400/250ரூ திருப்பி உன் வங்கி கணக்குலயே செலுத்திடுவாங்க..அதனால இதுக்கு முன்னாடி உன் வங்கி கணக்கு விவரங்கல பதிவு பன்னலனா மேலே சொன்ன லிங்க்ல போய் உன் வங்கி கணக்கு விவரங்கள பதிவு பன்னிடு..அப்ப தான் உனக்கு பணம் திரும்ப கிடைக்கும்..இது #ALP__TECHNICIAN பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் பொருந்தும், அவர்களுக்கும் தேர்வு எழுதினால் பணம் வாபஸ்
நன்றி பொறியாளர் கோ மருது
Bank Account & Smartphone -ஐ மட்டுமே வைத்து சுலபமாக பணம் சம்பாதிக்கலாம்
https://play.google.com/store/phonepe
இது 100% பாதுகாப்பானது. இது 100% எளிதானது, அது உண்மையில் மிகவும் வேகமாக இருக்கிறது.
-
Pothu Arivu Ulagam – NOV 2017 https://userupload.net/w4nfnfujzifm Pothu Arivu Ulagam – OCTOBER 2017 https://userupload.net/0...
-
TRB தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.