Tuesday, March 27, 2018

ஒரு லட்சம் காலிப்பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம்: ரயில்வே அதிகாரி அதிர்ச்சி

இந்திய ரயில்வேயில் காலியாக இருக்கும் ஒரு லட்சம் காலி இடங்களுக்கு ஏறக்குறைய 2 கோடி இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளது கண்டு அதிகாரிகள் வியப்படைந்துள்ளனர்.
ஆன்-லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில், எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இது குறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ரயில்வேயில் சி மற்றும் டி பிரிவில் காலியாக இருக்கும் 90 ஆயிரம் இடங்களுக்கும், ரயில்வே பாதுகாப்பு பிரிவில் 9,500 பணி இடங்களுக்கும் சமீபத்தில் விண்ணப்பம் கோரப்பட்டது. இதில் இதுவரை 2 கோடி இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்கும் காலக்கெடு முடிய இன்னும் 5 நாட்கள் இருப்பதால், மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
ரயில்வே துணை லோகோ பைலட்களுக்கும், தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்றவும் ஆன்-லைன் மூலம் 50 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 26 ஆயிரத்து 502 லோகா பைலட்களுக்கான இடங்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், குரூப் டி பிரிவில் 62 ஆயிரத்து 907 இடங்களும் காலியாக இருக்கின்றன’ எனத் தெரிவித்தார்.
தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் இந்தி, ஆங்கி்லம், உருது, வங்காளி, குஜராத்தி, பஞ்சாபி, கன்னடம், தமிழ், அசாமி, கொங்கனி, மலையாளம், அசாமி, மணிப்பூரி, மராத்தி, ஓடியா, தெலங்கு உள்ளிட்ட 15 மொழிகளில் இருக்கும்.
tamil thehindu



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.