TNPSC ASST DIRECTOR OF HORTICULTURE AND HORTICULTURAL OFFICER NOTIFICATIONS - 2017 | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலியிடங்களை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நிரப்பி வருகிறது. தற்போது வேளாண் துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 130 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இதில் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு 30 இடங்களும், தோட்டக்கலை உதவி இயக்குனர் பணிக்கு 100 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பிஎச்.டி. படித்தவர்கள் 32 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.சி., பி.சி.எம்., பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. கல்வித்தகுதி: தோட்டக்கலை தொடர்பான இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பிஎச்.டி. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. தோட்டக்கலை அதிகாரிக்கு தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கட்டணம் : விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 27-12-2017-ந்தேதியாகும். விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
-
Pothu Arivu Ulagam – NOV 2017 https://userupload.net/w4nfnfujzifm Pothu Arivu Ulagam – OCTOBER 2017 https://userupload.net/0...
-
TRB தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.