Sunday, September 17, 2017

OFFICE AUTOMATION COURSE - படியுங்கள் Aji

OFFICE AUTOMATION COURSE - படியுங்கள்
வணக்கம்,
சகோதர-சகோதரிகளே.
நடந்து முடிந்த குரூப்-4 இளநிலை உதவியாளர் (Junior Asst.) மற்றும் தட்டச்சில் (Typist) மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பிரிவில் பணியைப் பெற்று இருப்பவர்கள் ( COA (Computer Course of Office Automation) சேர்ந்து படியுங்கள்.
நீங்கள் தட்டச்சராக இருந்தால், வேலையில் சேர்ந்து இந்த பாடத்தில் முதல் ஆறு மாதங்களில் இருந்து மூன்று வருடங்களுக்குள் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும்.
(இது பழைய காலக் கெடு, ஆனால் நீங்கள் உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டு இருக்கும் அந்த ஒரு வருட தகுதி காண் பருவத்திற்குள் முடித்தல் மிகச் சிறப்பு, அல்லது பணியில் சேர்வதற்கு முன்பே இந்த படிப்பினை முடித்து இருந்தால் அது மிக மிகச் சிறப்பு. )
இளநிலை உதவியாளராக இருந்தாலும், போதுமான கணினி அறிவு இல்லை என்று நினைத்தால், இந்த Course ல் சேர்ந்து படிக்கலாம். நல்ல பலன் தரும்.
இந்த படிப்பினை நீங்கள் ஒரு தனியார் மாணவராகவோ அல்லது, ஏதேனும் ஒரு கணினி பயிற்சி மையத்திலோ சேர்ந்து பயிலலாம்.
அனால் இதற்க்கு என்று நடத்தப்படும் தேர்வு முற்றிலும் அரசுத் தேர்வாகும், நீங்கள் வெற்றி பெற்றதற்கு உரிய சான்றிதழை அரசே (DIRECTOR OF TECHNICAL EDUCATION) கொடுக்கும்.
வருடம் இரண்டு பருவத்தில் தேர்வு நடை பெறும், முதல் பருவ தேர்வு ஜூன் மாதத்திலும், இரண்டாம் பருவ தேர்வு டிசம்பர் மாதத்திலும் நடை பெறும். இந்த இரு மாதங்கள் தவிர பிற மாதங்களில், நீங்கள் தேர்வினை எழுத முடியாது.
இது தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு, ஒன்று தியரி எனப்படும் பாடப் பகுதி, மற்றொன்று பிராக்டிகல் எனப்படும் செய்முறை தேர்வு.
செய் முறைக்குத் தேவையான தேவையான கணினி வசதிகளை தேர்வு மையத்தில் அரசே ஏற்பாடு செய்து கொடுக்கும். நீங்கள் தேர்வினை மட்டும் நல்ல படியாக எழுதினால் போதுமானது.
இதற்க்கான பாடப் திட்டத்தின் தரம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மாற்றப்பட்டது. தற்போதைய பாடத் திட்டத்தினை படத்தில் காண்க.
Image may contain: text

Image may contain: text

Image may contain: text

No automatic alt text available.

இது முற்றிலும் அடிப்படைக் கணினி அறிவு இல்லாத அரசு ஊழியர்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரு பாடம். தங்கள் இளநிலையில் ஏற்கனவே, பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.இ. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு இந்த பாடத்தினை முடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
நீங்கள் அவ்வாறு கல்லூரியிலேயே கணினி பற்றி பயின்று இருந்தால், உங்கள் துறை மேலாளரிடம் தெரிவித்து இந்தப் படிப்பினை படிக்க வேண்டுமா? வேண்டாமா என்று உறுதி செய்து கொள்ளலாம்.
இல்லையெனில், உங்களுக்கு ஏற்கனவே அடிப்படிக் கணினி அறிவு இருப்பதானல், இந்த தேர்வில் மிக எளிதாக தேர்ச்சி பெற்று, இந்தச் சான்றிதழையும் வைத்துக் கொள்ளலாம்.
பயிற்சிக்கான கட்டணம்: 4,000 முதல் 7,000 வரை இருக்கும். (ஊர்களைப் பொறுத்து மாறுபடும்)
பயிற்சிக்கான காலம்: 4-6 months.
இதற்கு குறைந்த பட்ச தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு ஆங்கிலத்தில் இளநிலை (Typewriting lower) தேர்ச்சி அடைந்து இருக்க வேண்டும்
பயிற்சி நிறுவனத்தில் சேரும் பொழுது அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமா? என்பதை உறுதி செய்து கொள்ளவும். இது மிக முக்கியம்.
வாழ்த்துக்கள்.
நன்றி.
அன்புள்ள
அஜி
சென்னை.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.