Monday, September 18, 2017

அசல் வாகன ஓட்டுனர் உரிமம் ,போக்குவரத்து துறை அதிகாரிகள் எவ்விதமான விசாரணையும் இன்றி நீண்ட நாள் வைத்திருக்கவோ தன்னிச்சையாக ரத்து செய்யவோ அவர்களுக்கு அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்றம்

நன்றி....
.......இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்க்கு ...
அசல்  வாகன  ஓட்டுனர்  உரிமம் வாகனம் ஓட்டும் போது வைத்திருப்பது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதை வாகன சோதனைகளின் போதோ விபத்துகள் ஏற்படும் போதோ கைப்பற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் எவ்விதமான விசாரணையும் இன்றி நீண்ட நாள் வைத்திருக்கவோ தன்னிச்சையாக ரத்து செய்யவோ அவர்களுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஆண்டு 29.09.2016 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது உத்தரவின் நகல் கீழே தரப்பட்டடுள்ளது.மேலும் அதே உத்தரவில் காவல் துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளிடம் ஓட்டுனர் உரிமத்தை கைப்பற்றினால் அதற்கு கைப்பற்றும் அதிகாரி கையொப்பம் இட்டு ஒப்புகை ரசீது வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உரிமம் திருப்பி தரும் வரை ரசீதை வைத்து ஓட்டுனர் வாகனம் ஓட்டிக்கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான செய்தி இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகி உள்ளது. நண்பர்களே உங்களிடம் எந்த காவல் துறை அதிகாரிகள் வாகன ஓட்டுனர் உரிமத்தை கைப்பற்றினால் அதற்கு கைப்பற்றும் அதிகாரி கையொப்பம் இட்டு ஒப்புகை ரசீது வழங்க உரிமையோடு கேளுங்கள் .
நன்றி

No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.