Monday, July 24, 2017

விரைவில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்

புதிதாக அமைக்கப்பட்ட பள்ளிகளுக்கு விரைவில் 250 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

அரசு பள்ளிகளில் ரூ.7,500 மாத சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கருத்துக்கூற விரும்பவில்லை தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளனர். ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் பொது தேர்வுகளை மாணவ-மாணவிகள் எதிர்கொள்ளும் அளவுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சியும் அளிக்கப்படும். தமிழகத்தில் 250 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். இவர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்த பின்னர் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.


Tripr Printed Men V-neck Multicolor T-Shirt

Flipkart
GHPC Solid Men's Hooded Black T-Shirt 

நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.