தமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட
உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும்
மாற்றங்கள் தொடர்பாக, 41 வகையான அறிவிப்புகளை, விரைவில்
அமைச்சர்செங்கோட்டையன் வெளியிட உள்ளார்.
இதுதொடர்பாக, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது
* பகுதி நேர ஆசிரியர்களுக்கு, இதுவரை இல்லாத வகையில், அந்தந்த மாவட்டத்திலேயே, விரும்பிய இடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படும்
* ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உள்ள மாணவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்க, உடற்கல்வி ஆசிரியர் நியமனங்கள் அதிகரிக்கப்படும். உடற்கல்வி பாட நேரத்தில், கண்டிப்பாக விளையாட்டு பயிற்சிக்கு மாணவர்களை அனுமதிக்கும்படி உத்தரவிடப்படும்
* அரசு பள்ளிகளுக்கு, 2006 - 2007ல், வழங்கப்பட்ட கணினிகள் மாற்றப்பட்டு, நவீன கணினிகள் வழங்கி, 'ஸ்மார்ட் ஆய்வகம்' அமைக்கப்படும்
* அனைத்து மாணவர்களுக்கும், ரத்தப்பிரிவு, ஆதார் எண் அடங்கிய, ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும். இதில், மாணவர்களின் நலத் திட்ட உதவிகள் பதிவு செய்யப்படும். கல்வி உதவித் தொகையை, 'ஸ்மார்ட் அட்டை' மூலம், மாணவர் கள் பெறவும் வசதி செய்யப்படும்
* பள்ளி பாடத்திட்டங்களை மாற்ற, துணை வேந்தர் கள், இஸ்ரோ விஞ்ஞானிகள், ஐ.ஐ.டி., பேராசிரியர் கள் இடம் பெறும் குழு அமைக்கப்படும்.
* 'நீட்' தேர்வை எதிர்கொள்ள, 60 ஆயிரம் வினா - விடை தொகுப்பு அடங்கிய புத்தகம் வெளியிடப் படும்.அவற்றை, 'இ- லேர்னிங்' முறையில், மாணவர்கள் எப்போதும் படிக்கலாம். நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்கு, பள்ளிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்
* திறந்து வைக்கப்படாத ஆசிரியர் இல்லங்கள் திறக்கப்படும்; கோவை மற்றும் மதுரையில் ஆசிரி யர்கள் வசதிக்கு, ஆசிரியர் இல்லங்கள் புதிதாக திறக்கப்படும்
* ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி மாறுதல், பணப் பலன்கள் பெறுவதற்கு,ஆன்லைன் முறை கொண்டு வரப்படும். இதற்காக, ஐந்து பள்ளிகளுக்கு, ஒரு தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக் கப்படுவார். அதனால், உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு, ஆசிரியர்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது
* விபத்து நேரத்தில், தரமான சிகிச்சை அளிக்க, மாணவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, விபத்துமற்றும் மருத்துவ காப்பீடு அமல்படுத்தப் படும்
* பள்ளியை துாய்மையாக வைத்திருக்க, வகுப்புக்கு இரண்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டபணியாளர்கள் நியமிக்கப்படுவர்
* அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்க, கேரளாவின் ஆழியாறு மனவளக்கலை மன்றத்தில் பயிற்சி பெற்ற, 13 ஆயிரம் பேர், சம்பளமின்றி தன்னார்வலர் களாக நியமிக்கப்படுவர்
* அனைத்து பள்ளிகளிலும், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாய மாகும்.இதற்கு தனியாகஇணைப்பு புத்தகம் வழங்க படும்
* பி.எட்., மற்றும் 'டெட்' முடித்து காத்திருப் போரில், 7,500 பேர் அரசு பள்ளிகளில், பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், இவர்கள் பணியாற்றுவர்
* ஆசிரியர்கள் ஒரே இடத்தில், ஐந்து ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே, இட மாறுதல் கவுன்சிலிங்கிற்குஅனுமதிக்கப்படுவர்
* அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்கள், தங்கள் பிள்ளைகளை, அரசு பள்ளியில் பயில வைத்து முன்னோடியாக செயல்பட்டால் அவர்களுக்கு, சிறப்பு பரிசுவழங்கப்படும்
* பொதுத்தேர்வுகளில், தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்
* மாணவர்களுக்கு இந்த ஆண்டே, மூன்று வண் ணங்களில், கவர்ச்சியான புத்தகப்பை வழங்கப்படும்.
இவை உட்பட, 41 அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் கூறின.