ஓவியம், தையல், இசை உள் ளிட்ட தொழில்நுட்பத் தேர்வு களுக்கு ஆன்லைனில்
விண்ணப் பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக
அரசுத் தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்த ராதேவி நேற்று வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
வரும் மே மாதம் நடைபெறவுள்ள ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை,
விவசாயம், கைத்தறி நெசவு, தையல் ஆகிய தொழில்நுட்ப தேர்வுகளுக்கு ஏப்ரல் 20
முதல் 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் அரசு
தேர்வுத் துறையின் சேவை மையங்களுக்கு சென்று ஆன்லை னில்
(www.dge.tn.gov.in) விண்ணப் பத்தை பதிவுசெய்ய வேண்டும். அரசு தேர்வுத்
துறையால் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங் கள்
அடைப்புக்குறிக்குள் குறிப் பிடப்பட்டுள்ள இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன.சேவை மையங்களுக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்
பிப்பவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். தனியார் கணினி மையங்கள்
மூலம் கண்டிப் பாக விண்ணப்பிக்கக் கூடாது. தபால் மூலம் அனுப்பப் படும் விண்
ணப்பங்கள் எந்தவித முன்னறி விப்பும் இன்றி நிராகரிக்கப்படும்.
தேர்வு கட்டணம் விவரம் பின் வருமாறு:
நடனம் - ரூ.57 (கீழ்நிலை), ரூ.62 (மேல்நிலை)இந்திய இசை - ரூ. 27 (கீழ்நிலை), ரூ.37 (மேல்நிலை) இதர பாடங்கள் - ரூ.37 (கீழ்நிலை), ரூ.47(மேல் நிலை) ஏப்ரல் 26-ம் தேதி மாலை 5 மணி வரை சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.