இந்திய
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்வெளி மையங்களில்
87
விஞ்ஞானிகள்/
பொறியாளர்களை பணி அமர்த்த உள்ளது.
எலக்ட்ரானிக்,
மெக்கானிக்கல் மற்றும் கம்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்ற பட்டதாரிகள் இந்த பணிக்கு
விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிகள்
'குரூப்
ஏ அரசிதழில் பதிவுபெற்ற அதிகாரி'
பிரிவில் உள்ளன.
இந்த பணிக்கான ஊதியம் ஊதிய விகிதாச்சாரம் நிலை
10ன்
கீழ்
வழங்கப்படும்.
செயற்கைக்கோள் செலுத்து வாகனம்,
தொலை உணர்வு
(ரிமோட்
சென்சிங்)
அக்கியவற்றிக்கான திறன் மேம்பாடு,
கட்டுமானம்,
தொடர்பியல் ஆகிய பணிகள் இதில் அடங்கும்.
இப்பணிக்கான கல்வி தகுதி பி.இ
/
பி.டெக்
–
கில் முதல் வகுப்பு பெற்று குறைந்த பட்சம்
65%
மதிப்பெண்கள் அல்லது சி.ஜி.பி.எ
முறையில்
6.84/10
மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.
ஏ.எம்.ஐ.இ/
கிராட் ஐ.இ.டி.இ
தகுதி பெற்ற நபர்கள்
65%
மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.
இந்த கல்வி ஆண்டில் படிப்பை முடிக்கும் நபர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனால்,
31.08.2017
க்கு முன்பு பட்டம் பெற வேண்டும்.
வயது வரம்பு
-
07.03.2017
அன்று
35
வயது நிரம்பியிருக்க வேண்டும்.
முன்னால் படை வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயதுவரம்பு தளர்த்தப்படும்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்காணலில் எடுக்கும் மதிப்பெண்களை மையமாக வைத்து இறுதி தேர்வு செய்யப்படும்.
இப்பணிக்கு இணைதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
07.03.2017.
விரிவான விளம்பரம் மற்றும் விண்ணப்ப படிவம் குறித்த விவரங்களுக்கு
www.isro.gov.in
என்ற இணையதளத்தில் காணலாம்.
இப்பணிக்கான எழுத்து தேர்வு
07.05.2017
அன்று நடைபெறும்.