Tuesday, February 28, 2017

PSTM என்பது Person Studied in Tamil Medium

PSTM என்பது Person Studied in Tamil Medium

அதாவது TNPSC ல் முற்றிலுமாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழை மட்டும் ஒரு பாடமாக எடுத்து படித்தால் அது தமிழ் வழியில் படித்தல் ஆகாது, ஆங்கிலம் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களையும் தமிழில் படித்து இருக்க வேண்டும்.நீங்கள் தமிழ் வழியில்தான் படித்து இருக்கிறீர்கள் என்பதனை நிருபிக்க, TNPSC-க்கு நீங்கள் படித்த பள்ளி, மற்றும் கல்லூரியில் இருந்து தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் வாங்கி TNPSC ல் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழின் மாதிரி படிவம் TNPSC ஆல் கொடுக்க பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு (SSLC), மற்றும் பட்ட படிப்பு (Degree) இவற்றிற்கு தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி வைத்து கொள்ள வேண்டும். முடிந்தால் 12 ம் வகுப்பிற்கும் சேர்த்து வாங்கி வைத்து கொள்ளுங்கள், தவறு இல்லை.

சான்றிதழ் படிவத்தை நீங்கள் தயார் செய்து கொண்டு நீங்கள் படித்த பள்ளிக்குச் சென்றால், அவர்கள் அதனை நிரப்பி பள்ளி / கல்லூரி முத்திரை இட்டு பள்ளி / கல்லூரி முதல்வர் கையொப்பம் இட்டு தருவார். அந்த பள்ளியில் தான் படித்தீர்கள் என்பதனை நிருபிக்க இந்த சான்றிதழை வாங்க செல்லும் பொழுது மதிப்பெண் நகல் அல்லது மாற்றுச் சான்றிதழை எடுத்துச் செல்லலாம்.

முக்கியமாக, இந்த PSTM சான்றிதழை, நீங்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்யும்போது நான் தமிழ் வழியில் படித்து இருக்கிறேன் என்று தெரிவிக்க வேண்டும், மேலும் இந்த சான்றிதழ் வாங்கப்பட தேதியை விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட வேண்டும். அப்போதுதான், நீங்கள் தமிழ் வழியில் படித்து உள்ளீர்கள் என்று TNPSC-ஆல் ஏற்றுக் கொள்ளப்படும். உங்களுக்கான இட ஒதுக்கீடு சலுகையும் கிடைக்கும். மாறாக விண்ணப்பத்தில் நீங்கள் இதனை பற்றி குறிப்பிடாமல், பின்னர் சான்றிதழ் சரி பார்ப்பின் பொழுதோ அல்லது கலந்தாய்வின் பொழுதோ இந்தச் சான்றிதழை கொண்டு சென்றால் அது TNPSC-ஆல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

PSTM சான்றிதழை, தமிழில் வாங்கி வைத்து இருப்பது தவறு இல்லை, ஆனால் TNPSC அதற்க்கான ஆங்கில படிவத்தை கொடுத்து இருப்பதால் அதனையே பயன்படுத்துதல் மிகவும் நன்று. அதாவது நமது அனைத்து சான்றிதழ்களிலும் நமது பெயர் ஆங்கிலத்திலயே இருக்கும். இந்த சான்றிதழில் மட்டும் தமிழில் இருந்தால் பெயர் குழப்பம் ஏற்படும் என்பதற்காக ஆங்கிலத்தில் வைத்து இருக்கலாம். நீங்கள் ஏற்கனவே தமிழ் படிவத்தில் விண்ணப்பித்து இருந்தால் பரவாயில்லை.

படங்களில் TNPSC பரிந்துரைத்துள்ள PSTM சான்றிதழ் 10ம் வகுப்பு மற்றும் பட்டபடிப்பிற்கு உரிய மாதிரி படிவங்கள் - click  herehttps://app.box.com/s/b57awg64iz2xjqsss8xb
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.