Wednesday, March 01, 2017

லைசன்சு'க்கு 'ஆன்லைனில்' விண்ணப்பம்

ஆர்.டி.ஓ., எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமல், இன்று முதல் பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றிற்கு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்.'இ-சர்வீஸ் டிரான்ஸ்போர்ட்' என்ற இணையதளத்தில் சென்று, அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்து பதிவேற்ற வேண்டும்.
பின், விண்ணப்பதாரருக்கு உகந்த நாள், வட்டார போக்குவரத்து கழகம் ஆகியவற்றை குறிப்பிட்டு, விண்ணப்பிக்க வேண்டும். அக்குறிப்பிட்ட நாளில், கட்டணத் தொகை மற்றும் அசல் சான்றுகளுடன் சென்று, உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம்.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.