Tuesday, February 14, 2017

மத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணி இடங்கள் உருவாக்கப்படும்

பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவை வருமாறு:-

* அடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம்பணி இடங்கள் உருவாக்கப்படும்.
இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்கள்எண்ணிக்கை 35 லட்சத்து 67 ஆயிரம் ஆக உயரும்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 76 பேர்சேர்க்கப்படுவர். அதன்பின்னர் உள்துறை அமைச்சக பணியாளர்எண்ணிக்கை 24 ஆயிரத்து 778 ஆக அதிகரிக்கும்.

* போலீஸ் துறையில் 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் புதிதாக இணைவர்.அதன்பின்னர் இந்த துறையில் பணியாளர்கள் எண்ணிக்கை11 லட்சத்து 13 ஆயிரத்து 689 ஆகிவிடும்.

* வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் 2 ஆயிரத்து 109 பேர் பணிஅமர்த்தப்படுவார்கள்.

* புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறையில் 2 ஆயிரத்து 27 பேர் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.இந்த தகவல்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.